உமாச்சந்திரா பிரகாஷ். கொழும்பு 6: திருமதி உமாச்சந்திரா பிரகாஷ், இல. 51- 4/1, பெரேரா ஒழுங்கை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2019. (கொழும்பு 6: கே.ஐ.கிரியேஷன்ஸ்). vi, 58 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×17 சமீ., ISDN: 978-624-95089-0-3. 2009இன் பிற்பகுதியில் வீரகேசரி ஊடாக பத்திரிகைத்துறையில் கால்பதித்தவர். ‘கலைக்கேசரி” மாதாந்த சஞ்சிகையின் வாயிலாக ஊடகத்துறையில் தனக்கெனவொரு இடம் பெற்றுக்கொண்டவர். பெட்டகம், நல்லூர்க் கந்தசாமி பெருங்கோயில், வுhந னுளைஉழஎநசல ழக துயககயெ ஆகிய நூல்வரிசையில் இது இவரது நான்காவது நூல். தமிழர் வாழ்வியலில் முக்கியத்துவம் பெறும் கலை, கலாசார, பண்பாட்டு விடயங்களுடன் கூடிய தமிழர் பாரம்பரிய நகைகள், அணிகலன்கள், ஆபரணங்கள் தொடர்பான சுமார் 20 கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. தமிழறிஞரும் சமயப் பேச்சாளருமான அமரர் வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அவர்கள், தமிழர் அணிகலன்கள் மற்றும் இந்துமத சம்பிரதாயச் சடங்குகள் ஆகியன குறித்து, சமய ரீதியானதும், மரபு ரீதியானதுமான அரிய தகவல்களை அவ்வப்போது வழங்க, இளம் ஊடகவியலாளராக வலம்வந்திருந்த திருமதி உமாசந்திரா பிரகாஷ், அவற்றினை அழகாகத் தொகுத்து, கலைக்கேசரியில் இரு வருடங்களுக்கு மேல் தொடராக எழுதிவந்திருந்தார். அக்கட்டுரைகளைத் தொகுத்தும், அதனுடன் வேறு சில கட்டுரைகளை இணைத்தும் இந்நூலை உருவாக்கியிருக்கிறார். அணிகலன்கள் ஓர் அறிமுகம், தமிழர் கலாசாரத்தில் குழந்தை அணிகலன்கள், மங்கையரின் பாதங்களை அணிசெய்யும் கொலுசும் மெட்டியும், கழுத்தணிகளும் மார்பணிகளும், இடுப்பணிகள், காதணிகள், உடலுக்கும் உறவுக்கும் சுகம்தரும் மோதிரம், மூக்கிற்கு அழகு மூக்குத்தி, தமிழர் வாழ்வியலும் வளையலும், அர்த்தமுள்ள திருமணமும் தாலியும், நன்மை பயக்கும் நவமணிகள், குணம் நிறைந்த மாணிக்கம், பெருமை அளிக்கும் முத்து, ஒளிவீசி வழிகாட்டும் வைரம், ஒளிரும் தன்மை கொண்ட மரகதம், நிறைவாய் மிளிரவைக்கும் நீலக்கல், மன அமைதியைத் தரும் கோமேதகம், தீ போன்று ஒளிவீசி மனதைக் கவரும் புட்பராகம், வைடூரியம், சகல செல்வங்களையும் நல்கும் பவளம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64692).
Finest slot machine lights online No-deposit Bonuses & Rules 2024 You Casinos on the internet
Blogs Where can you enjoy totally free gambling games in the usa on the web? | slot machine lights online Card and you may Table