பாஸ்கரன் சுமன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).xii, 100 பக்கம், விலை: ரூபா 375., அளவு: 21.5×14.5 சமீ.,ISDN:978-955-659-631-1. இவ்வாய்வு பாண்டிருப்புத் திரௌபதையம்மன் ஆலயத்தை மையப்படுத்தி கிழக்கிலங்கை திரௌபதை வழிபாட்டுச் சம்பிரதாயங்களை விபரிக்க முனை கின்றது. இவ்வாய்வில் அடிப்படையாக ஆசிரியர், திரௌபதையம்மன் வழிபாடு என்பது தமிழகத்திலிருந்து ஈழத்துக்கான சனவேற்ற காலத்தில் கடத்தப்பட்ட வழிபாடு என்ற கருத்தியலை முன்னிறுத்தி அவற்றின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்துள்ளார். பாண்டிருப்பு மாத்திரமல்லாது உடப்பு வரலாற்றையும் அவர் இங்கு பதிவு செய்கின்றார். இன்னொரு உபகூறாக மலையகத்தில் மகாபாரதச் சடங்குடன் தொடர்புடைய ‘அருச்சுனன் தபசு”, சடங்கு நிலையில் நிலை பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். இந்தக் குறுக்கம் ஏன் நிகழ்ந்தது என்பதை ஆய்வு வினாவாக முன்வைக்கிறார். தொடர்ந்து அவர் அடையாளப்படுத்தும் ஆலயங்களில் திரௌபதையம்மன் வழிபாடு சடங்காசார முறையில் நிகழ்வதை விபரமாகத் தருகிறார். ஈழத்தின் திரௌபதை வழிபாட்டின் பரவல், பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலயம் (அருச்சுனன் தவநிலைச் சடங்கு, அரவான் களப்பலிச் சடங்கு), மட்டக்களப்புத் திருப்பழுகாமம் திரௌபதையம்மன் ஆலயம், மட்டக்களப்பு கல்லடித்தெரு (பாஞ்சாலிபுரம்) ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயம், மட்டக்களப்பு புதுநகர் ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயம், மட்டக்களப்பு கற்குடா (மகிழவெட்டுவான்) ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயம், மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயம், உடப்புத் திரௌபதையம்மன் ஆலயம், பாரத அம்மானை: விரிவடையும் ஆய்வுத் தளங்கள் ஆகிய ஒன்பது இயல்களில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பாஸ்கரன் சுமன் தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார்.
Greatest Ukraine Internet casino Internet sites
Content The way we Rate And Opinion U S Real cash Gambling enterprises Conclusion: Why should you Play Only at The best Web based casinos