சிவரமணி. திருக்கோணமலை: சிவரமணி, உவர்மலை, 1வது பதிப்பு, ஆவணி 2015. (வவுனியா: செந்தணல் பதிப்பகம், பண்டாரிக்குளம், ஒட்டுசுட்டான்). 72 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-7762-08-1. இதயத்தை வருடிச்சென்ற விடயங்களும், ஒவ்வொரு நொடிப்பொழுதும் அனுபவித்த அனுபவங்களும் உள்ளத்தின் உணர்வுகளும் ஒன்றாய் சங்கமித்ததன் பயனாக அழகான கவிவரிகள் துளிர்விட்டுள்ளன. அக்கவிவரிகளின் தொகுப்பாக கவிச்சுடர் சிவரமணியின் இத்தொகுப்பு வெளிவந்துள்ளது. புதுவரவு தொடங்கி அகந்தை ஈறாக மொத்தம் 42 தலைப்புகளில் இக்கவிதைகள் இடம்பெற்றுள்ளன. நுணுக்கமான வர்ணனை மெருகூட்டலால் அனைத்துக் கவிதைகளும் உயிர் பெறுகின்றன. இவரது கவிதைகள் பெண்ணியத்தின் உள்ளத்து உணர்வுப் பிரவாகத்தின் விம்பமாகவும் வலிகளில் பிறந்த வரிகளாகவும் சமூகத்தில் இவர் கொண்ட அக்கறையின் வெளிப்பாடுகளாகவும் தொனித்து நிற்கின்றன. இவை தோல்வியால் துவண்டுகிடக்கும் சமூகத்திற்கு ஏதோ ஒரு செய்தியைச் சொல்லிவைக்கின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தின் மீசாலைக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவரமணி, திருக்கோணமலையில் உவர்மலைப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார்.