பால. சுகுமார். சென்னை 600020: உயிர்மை பதிப்பகம், எண். 5, பரமேஸ்வரி நகர் முதல் தெரு, அடையார், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்). (8), 9-80 பக்கம், விலை: இந்திய ரூபா 110.00, அளவு: 21.5×14 சமீ. “நந்திக் கடல் /சிவந்து போனது/கண்ணீரோடு கலந்து/சென்னீரும் சேர்ந்து/ உப்புக் கரித்த/கடற்கரையெங்கும்/குண்டுகள் துளைத்த/உப்பிய உடல்களாய்/ நுரைத்துக் கிடந்தன” ஆசிரியரின் ஐந்தாவது கவிதை நூல். தான் வாழும் சூழலில் தன்னைப் பாதித்தவற்றை அவ்வப்போது கவிதைகளாக எழுதிவைத்ததாகக் குறிப்பிடும் இவர் தான் அதிகாலைப் பொழுதில் காலாற நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வேளைகளில் ஏற்படும் நினைவுத் தெறிப்புகளையும் கவிதை வரிகளாக உருவகித்துக் கொள்கிறார். நம்மைச்சூழ நாம் நஞ்சுமிழும் காளான்களின் மத்தியில் வாழ்கின்றோம் என்று கூறும் கவிஞர், வாழ்வின் சூழல் கவிதைகளை இங்கு நஞ்சுமிழும் காளான்களாகவே பதிவுசெய்து விடுகின்றார்.