காத்தான்குடி பாத்திமா (இயற்பெயர்: பாத்திமா முஹம்மட்). காத்தான்குடி: வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான பெண்கள் அமைப்பு, WEDF, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185V, திருமலை வீதி). 50 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×12.5 சமீ. கிழக்கிலங்கையின் காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் கலாபூஷணம் பாத்திமா முஹம்மட். அரச முகாமைத்துவ உதவியாளராக முப்பதாண்டுகாலம் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தன் மன உணர்வுகளின் குவியல்களாக இக்கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். ஏற்கெனவே அத்தனையும் முத்துக்கள் (2003), பொய்த் தூக்கங்கள் (2004) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டவர். இது இவரது முதலாவது கவிதைத் தொகுப்பாகும். இதில் அந்த இளமைக்காலம், இதுவும் ஒரு வாய் தவறி, இதுவொரு பிதற்றல், நா இடற வாய்தவறி, அன்பான மகனுக்கு, இளமைக்கு என்னாச்சு?, மனசாட்சியே மறுத்துவிடு, அவனுக்கென்று, உடன்பிறப்பென்று, நானும் நீயும், எழுத்தாளன் மட்டுமே, நீயும் நானும், இலக்கியவாதி, கனவுகள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.
Best British Free Spins No-deposit Casinos Oct 2024
Articles Best chance of winning online mobile slots slots | Can you earn real money and sustain that which you winnings that have free spins?