சி.இதயராசன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xii, 48 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0958- 02-3. சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் என இலக்கியத்தின் பல்வகைகளிலும் தன் ஆளுமையைப் பதித்து வருபவர் இதயராசன். இந்தக் கவிதைத் தொகுப்பின் ஊடாக, எமது சமூகத்தின்-மக்களின் இடர்கள், வாழ்வியல் முறைகள் என்பன வற்றை தனக்கேயுரிய கவிதை மொழியில் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். மட்டுவில் வடக்கைச் சேர்ந்த இவர், தன் தந்தையைப் பின்பற்றி, ஆரம்பகால இடதுசாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். 1964இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மொஸ்கோ-சீன சார்புநிலைகளில் இரண்டாகப் பிரிந்தபோது, தந்தையார் மொஸ்கோ சார்பாகவும், இவர் சீன சார்பாகவும் இயங்கினர். ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியாகவும் சேவையாற்றி ஓய்வுபெற்றுள்ள நூலாசிரியரின் மணி விழாவையொட்டி ஜீவநதி வெளியீட்டகத்தின் 87ஆவது பிரசுரமாக இக்கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது.