14626 நிறம் பூசும் குழந்தைகள் (கவிதைகள்).

ஏ.எம்.சாஜித் அஹமட். அக்கரைப்பற்று: பெருவெளி பதிப்பகம், 31/C, உப தபாலக வீதி, பதுர் நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (அக்கரைப்பற்று: சிற்றி பொயின்ட்). (20), 40 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ. கிழக்கிலங்கை அக்கரைப்பற்றில் பிறந்த ஏ.எம்.சாஜித் அஹமட், அக்கரைப்பற்று மாநகர சபையின் உத்தியோகத்தராகப் பணியாற்றுகின்றார். எழுத்தாளர் றியாஸ் குரானா அக்கரைப்பற்றிலிருந்து வெளியிட்டுவந்த “பெருவெளி” இதழில் இவரது கவிதைகளும் கதைகளும் பிரசுரம்பெற்றுள்ளன. போர், அதிகாரத்திடம் மண்டியிடல், பின்பு, புலம், அரசமரம், உம்மா இதனை மழைக்காலம் என்று சொல்வார்கள், நிறம் பூசும் குழந்தைகள், வண்ணத்துப் பூச்சி, அவர்கள்- குழந்தைகள்-சுவனம்?, கிறிஸ்துவுக்கு முன் எனதூரில் காகம் தேசியப் பறவை, போராளி, சொல்லுதல் எனும் திசையில் இருந்து விலகி புரிதல் எனும் மாற்றம், சப்தங்களற்ற இரவு, கவிதைகளைப் பாடவிடுங்கள், தண்டவாளம், கதைசொல்லி, நாற்காலி, ஒரு படைப்பாளி மரிக்கிறான், அம்மணம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 19 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்