வட வரணி சி.சபா. கொடிகாமம்: நதியோர நாணல்கள்- கலை இலக்கிய மன்றம், நாவற்காடு, வரணி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: சிவகஜன் பதிப்பகம்). (4), 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. கொடிகாமம் வரணி வடக்கைச் சேர்ந்தவர் கவிஞர் சி.சபா. அவர் அவ்வப்போது ஊடகங்களில் எழுதியிருந்த கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இரவில் கேட்கும் பாடலில் தொடங்கி, பகலில் காணும் கனவுகள் ஈறாக இவரது 40 பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
10452 சிங்கராஜா.
முகில்வண்ணன் (இயற்பெயர்: வே.சண்முகநாதன்). கல்முனை: கண்மணி பிரசுரம், இலக்கிய பவன், நெசவு நிலைய வீதி, பாண்டிருப்பு-1, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (தெகிவளை: ஏஜே பிறின்ட் நிறுவனம், 44, புகையிரத நிலைய வீதி). vi,