14638 புலமையும் வறுமையும்.

குலசேகரம் கமலேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). தெல்லிப்பழை: கு.கமலேஸ்வரன், துர்க்காபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சுன்னாகம்: மகிந்தன் கணனி அச்சகம்). 150+84 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17 சமீ. தெல்லிப்பழை துர்க்கையின் அதி அற்புதத்தின் நிலைகொண்டு உருவாக்கம்பெறும் ஐந்து புலவர்களின் சிந்தனைத்துளிகளே இந்நூலாகும். துர்க்கா கவிஞானி குலசேகரம் கமலேஸ்வரன், அவர்களின் 56ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு இந்நூல் 25.12.2011 அன்று வெளியிடப்பட்டுள்ளது. துர்க்கா கவிஞானி குலசேகரம் கமலேஸ்வரன், கரகத் திலகம் மு.ஐயாத்துரை, புலவர் மு.காளிதாசர், லயன வாத்திய திலகம் ஐ.சிவபாதம் பெண்பாற்புலவர் சண்முகலிங்கம் சிவயோகம் ஆகியோரின் பாடல்களை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது. இந்நூலின் இறுதியில் தனியாக எண்ணிடப்பட்டுள்ள 84 பக்கங்களில் “நாம இன்பரசம்” என்ற தலைப்பில் கு.கமலேஸ்வரன் அவர்கள் இயற்றியுள்ள முதலாவது தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வடிவங்களில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களைப் போற்றி அவர்களின் பேரிற் பாடப்பெற்ற பாடல்களாக இவை உள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18973).

ஏனைய பதிவுகள்