எம்.ரஸ்லான் ராஸீக். கொழும்பு 6: இலங்கை தமிழோசை இணைய வானொலி, 10 ½, 42ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2011. (மாவனல்ல: ஸ்மார்ட் அச்சகம்). xiv, 57 பக்கம், விலை: ரூபா 130., அளவு: 21.5×12 சமீ., ISBN: 978-955-51323-1-2. கவிஞர் எம்.ரஸ்லான் ராஸீக், மாவனல்லை மாலியத்தையைச் சேர்ந்தவர். இலங்கை தமிழோசை இணைய வானொலியின் பகுதிநேர அறிவிப்பாளராகப் பணியாற்றுபவர். இத்தொகுப்பில் இவர் எழுதிய மொட்டவிழும் மலர்கள், மன்னிக்க வேண்டும் தோழா, மலர் இழந்த செடி, அழைப்பு, ந(த)ங்கைக்கு நன்றி, வாழ்க தமிழ் வளர்க தமிழோசை, (சீ)தானம், பைத்துல் முகத்தீஸ், பைத்தியக்காரன், சுவனப் பாதையில், ஆசானே, இஸ்லாமியக் கடமையில், விலைபோகும் ஆண்மை, என் சாச்சிக்காய், அடுப்பங்கரை விளக்கல்ல, ஐமிய்யாவே, ஓர் ஆத்மா ஓய்கிறது, உலக அரசாட்சி, நண்பர்கள், இலங்கையில் முஸ்லிம்கள், பேனை, இலங்கை மண்ணிலே, சுவனத்தை நோக்கி, அரசியல்வாதிகள், எனக்கொரு உதவி, நானும் உன்னில், ஒளிமயமான எதிர்காலம் ஆகிய 27 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.