14653 மூசாப்பும் ஒரு முழு வெயிலும்.

எஸ்.ஜனூஸ். (இயற்பெயர்: ஜனூஸ் சம்சுதீன்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (கொழும்பு 10: யூ.டீ.எச். பிரின்டர்ஸ், 277/6, முதலாவது டிவிசன், கிங்ஸ் கோர்ட், மருதானை, ). ix, 74 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54019-1-3. 2012இல் “தாக்கத்தி” என்ற தனது முதலாவது கவிதைத் தொகுப்பை வழங்கிய இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் கவிஞர் எஸ்.ஜனூஸ் மீண்டும் மற்றொரு கவிதை நூலை இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளார். கவிஞர் ஜனூஸ் எழுதிய 44 தேர்ந்த கவிதைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. மனிதாபிமான அரவணைப்புக்களாக சில கவிதைகள் அமைகின்றன அஃறிணைப் பொருட்களோடு தனது உணர்வுகளைப் பதிவுசெய்யும் சில கவிதைகள் ஆழமான கருத்துக்களை பொதிந்துவைக்கின்றன. குதிரையோடுதல், வீதிகளும் வீதிக்கு வரும், கலப்படமாகிய மழை, மனிசப் பழங்கள், கள்ளப்பட்ட காற்று, உப்புச் சிரட்டைக்கள் உழுந்து சாகு, கடதாசி மாளிகை, நெட்டி மறித்த நிலா ஆகிய கருப் பொருள் அமைந்த வடிவங்களும் உயிர்ப்பு நிறைந்த தூக்கலான கவிதைகளாக ஒளிர்கின்றன. ஜப்பானிய ஹைக்கூ, “சென்” வடிவில் அமைந்த கவிதைகளும் ஒன்றிரண்டு தலைகாட்டியுள்ளன. உயர்திணையின் சாபக்கேடுகள் என்ற நெடுங்கவிதையில் சிறுவர் துஷ்பிரயோகத்தையும் சாடுகின்றார். மொத்தத்தில் இவரது கவிதைத்தொகுப்பில் கவிதா உணர்வையும் தாண்டிய மானுடநேயம் நமது மனதைக் கனக்கச் செய்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65081).

ஏனைய பதிவுகள்

12219 – புள்ளிவிபரப் படவரைகலையியல்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 1, முதலாம் ஒழுங்கை, பிரவுண் வீதி, திருத்திய 3வது பதிப்பு, ஏப்ரல் 2004, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994. (யாழ்ப்பாணம்: ராம் பிறின்ரேர்ஸ் கிராப்பிக்ஸ், பலாலி வீதி). (6),