14656 வாப்பாடம்மா (கவிதைகள்).

மு.இ.உமர் அலி. நிந்தவூர் 18: மு.இ.உமர் அலி, 20A, 1ம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 10: யூ.டீ.எச். கம்ப்யுபிரின்ட், மொஹிதீன் மஸ்ஜித் வீதி). xiv, 66 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-38118-0-6. கிழக்கிலங்கை முஸ்லீம் கிராமத்துப் பெண்களின் பண்புகளையும் கரைந்துபோய் மறைந்துவிட்ட வாழ்வியல் பண்புகளையும் பழக்க வழக்கங்களையும், தாய்மையின் விழுமிய எச்சங்களையும் இக்கவிதைத் தொகுதி பதிவுசெய்துள்ளது. கிழக்கிலங்கை முஸ்லீம்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த அவர்களது மண்வளச் சொற்கள் கேட்கக் கேட்க இனிமையானதும் இயற்கையின் எழிலோடு சங்கமித்து வரும் பண்பும் சிறப்பும் கொண்டவை. கவிஞர் மு.இ.உமர் அலி, தன் தந்தையின் தாயைப் பற்றி கொண்டுள்ள நினைவுச் சிதறல்களை இக்கவிதைகளில் மிகத் தத்ரூபமாக மனச் சித்திரமாக்கியுள்ளார். இப்பெண்ணின் தாய்மை உணர்வுகள், பண்பாடுகள், இயற்கையை உயிர்த்துடிப்போடு நேசிக்கும் அவரது பண்புகள் பாசங்கள் அனைத்தும் இந்நூலில் மிகச் செழுமையோடு கவிதைகளாக்கப்பட்டுள்ளன. இன்று வழக்கொழிந்துபோன பரிசார முறை, பெருநாள் தின்பண்டங்கள், மரண வீட்டுக் கடமைகள், பிறருக்கு அவரின் துன்பத்தில் கடன் கொடுத்து உதவுதல், வீட்டுச் சூழலில் குடும்பத்துக்கென வீட்டுத் தோட்டம் அமைத்துப் பராமரித்தல், சுயதேவைப் பூர்த்திக்கான கோழிஃகால்நடை வளர்ப்பு என்பன போன்றவற்றுடன் சமூக வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் மூனறாம் தலைமுறையின் நெஞ்சத்தில் நிழலாட வைக்கின்றார்.

ஏனைய பதிவுகள்