தி.வேல்நம்பி. யாழ்ப்பாணம்: தமிழ் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மீனாட்சி அச்சகம், நல்லூர்). 56 பக்கம், விலை: ரூபா 18.00, இந்திய ரூபா 12.00, அளவு: 18×12 சமீ. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் சிறந்த ஆய்வாளராகவும் விளங்குபவர் பேராசிரியர் தி.வேல்நம்பி. 28.04.1968 இல் புத்தூர் கிழக்கு, அந்திரானையில் திருநாவுக்கரசு-யோகமணி தம்பதியரின் மகனாகப் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியையும் உயர் கல்வியையும் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியில் கற்றார். 1981 ஆம் ஆண்டு தொடக்கம் 1983 ஆம் ஆண்டு வரை மூன்றாண்டுகள் மல்லாவி மத்திய கல்லூரியில் பயின்றுள்ளார். 1990 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகத்துறை மாணவனாக உள்நுழைந்த இவர் 1996 இல் இதே பல்கலைக்கழகத்தில் நிரந்தர விரிவுரையாளராக நியமனம் பெற்று பல உயர்வுகளைக் கண்டு இன்று பேராசிரியராகவும் வணிக முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் தலைவராகவும் விளங்குகின்றார். இளம் விரிவுரையாளராக பல்கலைக்கழகத்தில் வலம்வந்த வேளையில் வெளியிடப்பெற்ற “வேர்கள்” தொகுதி அவரை ஒரு கவிஞராக எமக்கு இனம் காட்டியுள்ளது. “நீ எந்தன் உயிரல்லவோ” என்ற கவிதை அவருடைய தொகுதிக்கான தமிழ் வாழ்த்தாக அமைகின்றது. காதல், சமூகம், சமகால நிலைமைகள் என்பன பற்றியெல்லாம் அவர் பாடியுளளார். சில வரலாற்று நிகழ்வுகளையும் கவிதையுருவில் பதிவுசெய்துள்ளார். வன்னிப் பயணம், ஏன் இந்தக் கோலம் என்பன சில மாதிரிகள்.