ஈழத்துப் பூராடனார் (மூலம்), எட்வேட் இதயச்சந்திரா (தொகுப்பாசிரியர்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (கனடா: ஆணர்ல்ட் அருள், ரிப்ளெக்ஸ் அச்சகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9). xiv, 178 பக்கம், புகைப்படங்கள், விலை: கனேடிய டொலர் 10., அளவு: 21.5×13.5 சமீ. கிறிஸ்துவின் இருபது அற்புதங்களை இருபது நாடகங்களாக்கி “கிறிஸ்துவின் அருள் வரங்கள்” என்ற முதலாவது பகுதியிலும், அற்புதங்கள் அல்லாத விதத்தில் இயேசுவின் வாழ்க்கையில் நடைபெற்ற அவரது தெய்வீக வெளிப்பாடுகளைக் காட்டுவனவாக மேலும் பன்னிரண்டு நாடகங்களை “கிறிஸ்துவின் தெய்வீக வெளிப்பாடுகள்” என்ற இரண்டாவது பகுதியிலும் ஈழத்துப் பூராடனார் தந்துள்ளார். இவை ஓரங்க நாடகங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முதலாவது பகுதியில் கடவுளின் பரிசுத்தர், சுகந் தரும் கரங்கள், உள்ளச் சுகமே சுகம், குஷ்ட ரோகியைக் கூசாமற் தொட்டார், சொன்னதும் சுகமானது, சூம்பின கை சுகம் பெற்றது, வல்லமை புறப்பட்டு வாழ்வளித்தது, வார்த்தையே போதும் வாழ்க்கைக்கு, பாடையைத் தொட்டார் மரித்தவன் உயிர்த்தான், பேய் பிடித்ததால் குருடு செவிடு ஊமையானவன் குணமாகினான், பன்றிக் கூட்டத்திற் புகுந்து பசாசுகள் மாய்ந்தன, ஆடையைத் தொட்டார் பீடை போனது, மரிக்கவில்லை எழுந்திரு, நம்புகிறபடி ஆகக் கடவது, படுக்கையில் வந்தவர்கள் பரமசுகம் பெற்றனர், சிந்துஞ்சிறு துணிக்கை போதும், திறவுண்டு போ எனச் செவிகள் திறந்தன, விசுவாசித்தால் எல்லாம் இயலும், விடுபட்டாய் எனப் பிணி விலகிற்று, பதில் சொல்ல முடியாதளவான சுகம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 20 நாடகங்களும், இரண்டாவது பிரிவில் இவர் என் நேசன், அப்பாலே போ சாத்தானே, என் வேளை இன்னும் வரவில்லை, ஐந்து அப்பங்கள் இரண்டு மீன்கள், கடலுக்கும் காற்றுக்கும் கட்டளை, ஆசீர்வதித்த ஏழு அப்பங்கள் பல்லாயிரவரின் பசியைத் தீர்த்தது, நான் தான் பயப்படாதீர்கள், இவருக்குச் செவி கொடுங்கள், சிலுவையின் தெய்வீகம், இயேசு மரணத்தை வென்றார், எம்மாவூரில் சீடருக்குத் தரிசனம், இன்னுமா நம்பிக்கை இல்லை? ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பன்னிரு நாடகங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36617).
Gods of Kemet On the web Slot Comment Have fun slot hot nudge with the 100 percent free Demonstration
Blogs The fresh Appeal away from Free Position Video game – slot hot nudge Get the Paws for the Fiery Have Get up to 20,100000