14670 பத்தினித் தெய்வம்: சிலப்பதிகார நாடகங்களும் வில்லுப்பாட்டுக்களும்.

சு.செல்லத்துரை. தெல்லிப்பழை: தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, ஜுலை 2016. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). (4), 100 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-7973-02-9. அமரர் சிவகாமிசுந்தரி செல்லத்துரையின் ஆறாவதாண்டு நினைவு நூலாக 03.07.2016 அன்று வெளியிடப்பட்டது. உடுவை தில்லை நடராசாவின் வாழ்த்துரை, கோகிலா மகேந்திரனின் அணிந்துரை ஆகியவற்றுடன் தொடங்கும் இந்நூல், “புலவர் செய்த நாடகத் தமிழ்” என்ற தலைப்பிலான காப்பியக்கோ ஜின்னா ஷெரிபுத்தீனின் ஆக்கத்தையும், பண்டிதர் ம.ந.கடம்பேஸ்வரன் அவர்களின் “சாத்துகவி”யையும் தொடர்ந்து பத்தினித் தெய்வம் நாடகங்களான கோவலன் பிரிவு, கண்ணகி வழக்குரை, கற்புக்கனல், பத்தினித் தெய்வம் ஆகிய நாடக எழுத்துருக்களையும், பத்தினித் தெய்வம் வில்லுப்பாட்டுக்களான கோவலன் பிரிவு, கண்ணகி வழக்குரை, கற்புக்கனல், பத்தினித் தெய்வம் ஆகிய வில்லுப்பாட்டு எழுத்துருக்களையும் கொண்டுள்ளது. கொழும்பு இந்து மகளிர் பாடசாலை மேடைகளில் அரங்கேற்றம் காணவென இப்படைப்பாக்கங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

ஏனைய பதிவுகள்

Baba Nuts Slots

Posts Online Ports Which have Added bonus Cycles Templates Of Free online Slot Game Black Diamond Ports The new Play’N Look online position, which has

13489 எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம்: கழுத்து, முதுகுப் பிரச்சினைகளுக்கான மாற்று வழிகள்.

ஹன்ஸ் மேதர். இரத்மலானை: சர்வோதய விஷ்வலேகா வெளியீட்டாளர்கள், 41, லும்பினி அவென்யூ, 2வது பதிப்பு, 2005, 1வது பதிப்பு, 2004. (இரத்மலானை: சர்வோதய விஷ்வலேகா வெளியீட்டாளர்கள்). xiii, 102 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா