14674 உலக காவியம்: அறிவியல் ஆன்மீக காவியம்.

பாரதிபாலன் (இயற்பெயர்: ஜெயகுமார் குமாரசுவாமி). யாழ்ப்பாணம்: மகரிஷி பதிப்பகம், 55, ஆடியபாதம் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மார்ச் 2014. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). (24), 98 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 310., அளவு: 21×15 சமீ., ISBN: 978- 955-7546-00-1. இவ்வறிவியல் ஆன்மீகத் துறையில் எழுந்துள்ள இக் காவியம் மனிதர், விலங்கு, பறவை, தாவரங்கள் முதலான அனைத்து உயிரினங்களினதும் இன்ப இணைவு, ஒரு புதிய உலகம் பற்றிய கனவினை நனவாக்கும் என்கின்றது. கணனி உலகின் நஞ்சூட்டலால் பாதிப்புற்ற மானிடத்தின் மென்மை உள்ளத்தைக் கழுவிச் சீராக்கி மீட்டெடுத்து சுயமாகச் சிந்திக்கும் இயற்கையுடன் இணந்து வாழும் ஆற்றலை இனிவருங்காலத்திற்கு வழங்கும் வகையிலான கருத்துக்களை இக்காவியப் பாத்திரங்கள் தருகின்றன. 2003இல் வெளிவந்த ஆசிரியரின் முன்னைய நாவலான “சமரசபூமி”யின் தொடர்ச்சியாக இக்காவியத்தைக் கொள்ளமுடிகின்றது. டென்மார்க்கில் வசிக்கும் கவிவேளம் பாரதிபாலன் ஈழத்து மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். டென்மார்க்கின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சனின் The Little Mermaid என்ற காவியத்தை தமிழில் கடற் கன்னி காவியம் என்று மொழிபெயர்த்தவர். இவர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலக உதவித் தலைவர்களுள் ஒருவராகவும் மேற்படி தமிழியல் இயக்கத்தின் ஸ்கன்டிநேவிய நாடுகளின் அமைப்பாளருமாகத் தன் சேவையை ஆற்றி வருகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 64719).

ஏனைய பதிவுகள்

13A20 – படவரைகலையில் எறியங்கள்: உயர்தர வகுப்பிற்குரியது.

க.குணராஜா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 7வது பதிப்பு, ஓகஸ்ட் 2002, 1வது பதிப்பு, ஏப்ரல் 1965. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை). 88 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 120.,

12442 – அகில இலங்கை தமிழ் மொழித்தினம் ; 1993.

தமிழ்மொழிப் பிரிவு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கல்வி இராஜாங்க அமைச்சு, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). (52) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×22 சமீ. கல்வி உயர்கல்வி அமைச்சின்

14915 என் பெயர் விக்டோரியா: நதியைக் கடக்க முனைந்தவள்.

தொந்தா விக்டோரியா (ஸ்பானிய மூலம்), தேவா (தமிழாக்கம்). சென்னை 600005: வடலி வெளியீடு, பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 220

14415 தமிழ் தலைப்புச் சொற்களுடன் முழுமையான பிரயோக மும்மொழி அகராதி.

எழுத்தாளர் குழு. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 8: அரசாங்க