காரைக்கவி கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், Creaze Digita, 14, அத்தபத்து டெரஸ்). xii, 62 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5222-07-0. தான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் அதனூடாக தனது அபிப்பிராயத்தையும், கருத்துக்களையும் இணைத்து பொதுமைப்படுத்தி சுருக்கக் கதைகளாகத் தன் முகநூல் பதிவுகளில் பத்மானந்தன் எழுதிவந்துள்ளார். அவற்றின் தேர்ந்த தொகுப்பு இதுவாகும். கனவு, உண்ணாவிரதம், அடுத்த வீட்டில் பூசை, சந்தை, வாத்தியார், பதுக்கல், லண்டன் பவளம், வேட்டி, அடியார், பிரசங்கம், டீச்சரின் பிறந்தநாள், பாராட்டு, ஆச்சிக்கு கிறுவை, கொழுக்கட்டை, சயிக்கிள், அப்டேட்ஸ், பிரால் சட்டி, கோயிலுக்குக் கொடுத்த லைட், அருச்சனை, கிளினிக், சொற்பொழிவு, சாத்திரம், பிரிட்ஜ், பூசை, வாத்தியார் மகன், சாப்பாடு, பேஸ்புக், எஞ்சினியர், பரிமளம் வீடு, புரட்டாசிச் சனி, ஸ்மார்ட் போன், தேவியக்காவின் புருஷன், ஆனந்தனின் வருத்தம், சுமதியின் சப்பாத்து, நிகழ்ச்சித் தொகுப்பாளர், வைக்கல் பட்டறை நாய், திருவிழாவுக்கு வெளிக்கிட்டவள், சாத்திரியார், சின்ன மகளின் சொக்கலேட், மெல்லத் தமிழ் சாகிறது, வரவேற்பாளினி, தண்ணீர் பந்தல் முருகேசன், விரத ஆடு, பஞ்சாங்கம், இடியப்பம், பிச்சை, கடவுள், கத்தி, நாய், மயிர், முருங்கைக்காய் ஆகிய 51 சுருக்கக் கதைகள் இத்தொகுப்பில் தேர்ந்து வழங்கப்பட்டுள்ளன.