நிதனி பிரபு, ரோசி கஜன் (இணை ஆசிரியர்கள்). வவுனியா: நிதனி பிரபு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). 165 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-40962-6-2. இந்நூலில் நிதனி பிரபு எழுதியுள்ள சமாளிக்கலாம், நெஞ்சள்ளிப் போனவளே, உனக்கொன்று சொல்லவேணும், செந்தூரன், உதிரிப்பூக்கள், நெஞ்சே நீ வாழ்க ஆகிய ஆறு சிறுகதைகளும், ரோசி கஜன் எழுதியுள்ள பசி, விட்டில் பூச்சிகள், கார்த்திகை பதினொன்று, மறுதலிப்பு, வாழ்க்கை வாழ்வதற்கே, கண்ணம்மா இறந்துவிட்டாள், உன்னைப்போல் ஒருவன்அவள் என் உயிர் இல்லை ஆகிய எட்டு சிறுகதைகளுமாக மொத்தம் பதினான்கு கதைகள் இடம்பெற்றுள்ளன. பந்தம் பாசத்திற்காக ஒருவர் செய்யும் தியாகங்களின் வலியைப் பேசுவதாக “சமாளிக்கலாம்” அமைந்துள்ளது. “துணை”, வாழ்க்கைத் துணையின் தேவை அருகாமை என்பன எதிர்பார்க்கும் தருணங்களில் கிட்டாமல் போவதால் ஏற்படும் நிகழ்வை விபரிக்கின்றது. “உனக்கொன்று சொல்லவேணும்” என்ற கதை நெஞ்சில் ஆழமாகப் பதிந்துபோன துணை மீதான நேசத்தின் மொழியாகின்றது. “மறுதலிப்பு” என்ற கதையில் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தும் எண்ணம் கொண்டவனின் காமுகத்தனமும், இறைஞ்சலின் உதாசீனமும் துல்லியமாக வெளிப்படுகின்றது. “செந்தூரன்”- கல்யாணச் சந்தையில் விலைபோகாமல் தங்கும் கன்னியொருத்தியின் மன உளைச்சலைக் கூறுகின்றது. துன்பத்தையும் தோல்வியையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை வளர்க்க “வாழ்க்கை வாழ்வதற்கே” ஆலோசனை தருகின்றது. இவ்வாறு எமது சமூகத்தில் நடக்கும் அன்றாடப் பிரச்சினைகளை மையப்படுத்தி இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.
Classic Casino slot games
Blogs Totally free Harbors And best Slots No Install Best Team With Panda Harbors On the internet How to get started At the A slot