14690 கறுத்த கோடுகள்: சிறுகதைகள்.

ஏ.எஸ்.எம்.நவாஸ். கொழும்பு 14: திருமதி ஹபீலா நவாஸ், சினிலேன்ட் பதிப்பகம், 1வது பதிப்பு, 2017. (வத்தளை: ஏஞ்சல் அச்சகம்). 89 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-38038-0-1. எண்பதுகளில் தனது மணிக் கவிதையை சிந்தாமணி (தினபதி-சிந்தாமனி)யில் வடித்த ஏ.எஸ்.எம்.நவாஸ், கால் நூற்றாண்டையும் கடந்து தேசியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இன்னமும் எழுதிவருகின்றார். 1995-2015 காலகட்டத்தில் மித்திரன், தினகரன், மல்லிகை, இருக்கிறம், இனிய நந்தவனம், ஆகிய ஊடகங்களில் எழுதப்பட்ட சிறுகதைகளில் தேர்ந்த 14 கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. கருவைத் தொட்ட உயிர் (மித்திரன், 1995), யாழ்ப்பாணம் பார்ப்போமா? (2002), கறுத்த கோடுகள் (தினகரன், 2006), பொறியில் எலி (மல்லிகை, 2008), நிழல் (மல்லிகை, 2006), திறப்பு (மல்லிகை 2008), அவன் அவள் (இருக்கிறம், 2008), அந்த ஒன்றுக்காக (2010), அம்மாவின் அழகான மனசு (இனிய நந்தவனம், 2010), பரிசோதனைகள் (தினகரன், 2011), மோசமானவர்கள் (மித்திரன், 2013), பசிக்குள் பசி (மித்திரன், 2014), தலைகுனிவு (மித்திரன், 2015), மண்ணின் மணம் (மல்லிகை, 2006) ஆகிய கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Gambling enterprise Igre Online

Posts Profits And you will Incentives The book Out of Ra Deluxe 10: Winnings Means Slot Have There are several chances to win larger in

14459 வேற்றுக் கிரக மனிதர்கள்.

கனி-விமலநாதன் (இயற்பெயர்: சின்னையா ரிட்ஜ்வே விமலநாதன்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 94: