14709 புத்தரின் கடைசிக் கண்ணீர்.

இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Vetlandsveien 117, 0686 Oslo, 1வது பதிப்பு ஜனவரி 2019. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 138 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-0- 244-74694-0. பதினைந்து சிறுகதைகளையும் ஒரு குறுநாவலையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. நரகம் சொர்க்கம் மோட்சம், தெய்வமில் கோயில், பலசரக்குக் கடைகள், சாத்தான்கள், குருவும் சிஷ்யனும், இருப்பல்ல இழப்பே இன்பம், பொக்கிசம், கணேசர் வீட்டுப் பேய், அவனே அவனைப் பார்த்து, புத்தரின் கடைசிக் கண்ணீர், சங்கீதாவின் கோள், புத்தரும் சுந்தரனும், வேதாளம், உடன் பிறப்பு, கூத்தனின் நரகம் ஆகிய சிறுகதைகளுடன் தன்னைத் தான் உண்ணும் என்ற குறுநாவலும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இக்குறுநாவல், இயற்கையின் இயக்கம், தெற்கு ஈழத்தில், மஞ்சஸ்ரர், மருத்துவரிடம், அடுத்த சந்திப்பு, தாய் நாட்டிற்கு, மூன்றாவது பயணம் ஆகிய ஏழு இயல்களில் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்