டபிள்யூ. ஏ.சில்வா (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2015. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (8), 9-144 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-30- 6537-7. சிங்கள இலக்கியத்துறையில் முன்னோடிப் படைப்பாளிகளுள் ஒருவர் டபிள்யூ. ஏ.சில்வா. வெள்ளவத்தையில் மத்தியதரக் குடும்பமொன்றில் பிறந்த இவர் 1890- 1957 வரையிலான தன் வாழ்நாளில் 50 ஆண்டுகளை சிங்கள இலக்கியத்திற்கு அர்ப்பணித்து மறைந்தவர். 1907இல் தனது 17ஆவது வயதில் தனது முதலாவது நாவலை (சிரியலதா) எழுதிப் பிரமிப்புக்குள்ளாக்கியவர். சிங்களம், பாளி, சம்ஸ்கிருதம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர் கொண்ட பரிச்சயம் பலரும் அறிந்தது. இவரது “கெலே ஹந்த” நாவல் சிங்களத் திரைப்படமாக்கப்பட்டிருந்தது. சிங்கள சினிமாவில் முதன்முறையாக நாவல் ஒன்று திரைப்படமானதென்ற வரலாற்றுப் பதிவு “கெலே ஹந்த” அவரது நாவலுக்கே உரியது. “கைக்குட்டை” என்ற இந்நூலில் டபிள்யூ. ஏ.சில்வா எழுதிய 11 சிறுகதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. பேயின் கடிதம், பழக்கதோஷம், சுவர்க்கம், பரிசு, வைடூரியம், அமங்சிரால, நோன்மதி தினம், கைக்குட்டை, மாமாவின் விருப்பம், தலையணை உறை, முகராசி ஆகிய தலைப்பகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65495).
Gratis casino Casino X lagligt Casinospel
Content Kant Ik Fria Slots Spelen Upp Mijn Mobiele Telefoon? | casino Casino X lagligt Måste Jag Fylla Ned Något Innan Att Utpröva Fria? Kli