14755 கடலின் நடுவில்.

கே.எம்.எம்.இக்பால். கிண்ணியா 4: கலாநிதி கே.எம்.எம்.இக்பால், கட்டையாறு, 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (4), 60 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×14.5 சமீ. கடலின் நடுவில் கே.எம்.எம்.இக்பால் அவர்களின் பத்தாவது நூலாகவும், முதலாவது நாவலாகவும் வெளிவந்துள்ளது. சரவணன், சேகுத்தம்பி, இஸ்மாயில் ஆகிய மூன்று மீனவர்கள் ஆழ்கடலுக்குத் தொழிலுக்காகச் செல்கின்றனர். கடலின் நடுவிலே திசைமாறி படகு ஆழ்கடலுக்குள் சென்றுவிடுவதிலிருந்து அவர்களுக்கு ஏற்படும் திகில் மிக்க அனுபவங்களை மிகவும் விறுவிறுப்பாக இந்த நாவல் சித்திரிக்கின்றது. ஆபத்தில் உதவுவதற்கு மதம், மொழி என்பன தடைக்கற்களாக அமையாது என்ற மத ஐக்கியத்தை வலியுறுத்தும் நாவல். கொட்டியாரப் பிரதேச வழக்காற்றுச் சொற்களும் மீன்பிடித் தொழில்முறையின் நுணுக்கங்களும், மீனவச் சமூகத்தினரின் வாழ்க்கை முறைகளும் இந் நாவலில் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளன. இக்கதை மித்திரன் பத்திரிகையில் தொடர் கதையாக முன்னர் வெளிவந்திருந்தது. தினகரன் பத்திரிகையில் வெளிவந்திருந்த ஒரு செய்தியின்படி கடலுக்குத் தொழிலுக்குப் போன மூவர், படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சிலநாட்கள் ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் இருவர் இறந்துவிட, எஞ்சியவரான ஜனாப் அபூபக்கர் என்பவர் அவ்வேளையில் இலங்கையில் அமைச்சராகவிருந்த பேரியல் அஷ்ரப்பின் உதவியுடன் தாயகம் மீண்டிருந்தார். இச்செய்தியை அடிப்படையாக வைத்தே இந்நாவல் எழுதப்பட்டுள்ளதென ஆசிரியர் குறிப்பிடுகிறார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 065326).

ஏனைய பதிவுகள்

Kasino Maklercourtage Abzüglich Einzahlung 2024

Content Konnte Ich Den Sofortbonus Erhalten, Abzüglich Mich Anzumelden? Häufige Flüchtigkeitsfehler, Die Sie Vermeiden Sollten, Falls Eltern Nach Kostenlosen Spielsaal Provision Bloß Einzahlung Angeboten Suchen

14863 அனைத்தும்: படைப்பிலக்கியம் பற்றிய பார்வை.

முருகேசு ரவீந்திரன். யாழ்ப்பாணம்: அருணோதயம் வெளியீடு, 22/10, கச்சேரி நல்லூர் வீதி, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). xvii, 138 பக்கம், விலை: ரூபா 300.,