14772 துன்பக் கேணியில்… (ஒரு நாவல்).

செ.யோகநாதன். கொழும்பு: சத்யபாரதி பதிப்பகம், 202/1 காலி வீதி, மவுன்ட் லவீனியா (கல்கிசை), 1வது பதிப்பு, 1997. (சென்னை 5: மாசறு பதிப்பகம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை). 101 பக்கம், விலை: இந்திய ரூபா 40.00, அளவு: 19.5×13 சமீ. 1985 காலப்பகுதியிலிருந்து இக்கதை தொடங்குகின்றது. இலங்கைத் தமிழரின் அகதிவாழ்வு பற்றிப் பேசும் நாவல். இது பின்னர் “நிரய” என்ற தலைப்பில் மடுளுகிரியே விஜயரத்னவால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் 28.01.2008 ல் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான “மனக்கோலத்தை” எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்பட விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர். இலங்கையில் வாகரையிலும், பூநகரியிலும் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய பின் நாட்டு நிலைமை காரணமாக 1983ல் இந்தியாவிற்கு செல்ல நேரிட்டது. இந்நாவல் இவரது இந்திய அகதி வாழ்வின்போது எழுதப்பட்டது. மேலும் இவரது கைவண்ணத்தில் 13 நாவல்களும், 15 குறுநாவல்களும், 17 சிறுகதைத் தொகுதிகளும், 11 சிறுவர் நூல்களும், சினிமா, வாழ்க்கைவரலாறு என இரு நூல்களும் வெளிவந்துள்ளன. இவர் சஞ்சயன் எனும் புனைபெயரிலும் எழுதிவந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21139).

ஏனைய பதிவுகள்

14738 அவனுக்குள் ஆயிரம் (நாவல்).

தினேஷ் ஏகாம்பரம். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). x,