தேவகாந்தன். சென்னை 600077: நற்றிணை பதிப்பகம், பிளாட் எண் 45, சாய் கவின்ஸ் குமரன் அபார்ட்மென்ட்ஸ், தேவி கருமாரியம்மன் நகர், கிருஷ்ணா நகர் பிரதான சாலை, நூம்பல், ஐயப்பன் தாங்கல், 1வது பதிப்பு, ஜனவரி 2019. (சென்னை 600005: சாய் தென்றல் பிரின்டர்ஸ்). (6), 7-104 பக்கம், விலை: இந்திய ரூபா 130., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81- 939017-3-1. “மூதினங்கள் பலவற்றின் ஐதீகங்களிலும் உள்ளோடியுள்ள ஆன்மீக ஒருமையே இந்நாவலின் ஆதாரமாய் அமைகின்றது. நைல் ஆரஸ் தைகிரிஸ் நதிதீர இனக் குழுமங்களினதைப் போலவே, நீர்வளமேயற்ற இலங்கை வடபகுதியிலுள்ள தமிழ்க் குமுகாயத்தின் ஐதீகங்களும் ரத்தமும் சோகமுமான நீள் வரலாறுகொண்ட கனடாவின் செந்நதிதீரத்தில் கொள்ளும் உறவு தமிழ் நாவல் பரப்பின் புதிய பிரதேசம். சிவப்பிரகாசமும் மங்களநாயகியும் வின்ஸியும் ஒரே சமூகத்தினதும் கலாசாரத்தினதும் பிரதிநிதிகள்தான். ஆயினும் புத்துலகின் இறுகும் கண்ணிகளிடையே ஒரு புள்ளியில் எவ்வாறு அவர்கள் இணங்கியும் பிணங்கியும் சேர்ந்தும் பிரிந்தும் மகிழ்ந்தும் துயருற்றுமான நொருங்கிய மனநிலைகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதையே நாவலின் மய்யம் உணர்த்துகிறது. இத்துடன் ஒப்புநோக்குகையில் வெவ்வேறு கலாசார பின்னணிகொண்ட சிவப்பிரகாசமும் கிநாரியும் கொள்ளும் உறவுச் சிக்கல்கள் பெரிய அதிர்ச்சியைத் தருவதில்லை. ஆனால் அவற்றின் மூலமாக மனித உறவின் விழுமியங்களே இருப்பது பேரதிசயமாக நாவலில் விரிகின்றது. புலப்பெயர்வின் சோகம் பெருமளவு கரைந்தாயிற்று. இன்றைய புதிய உலகச் சூழ்நிலையில் ஒவ்வொரு புலம்பெயர் சமூகமும் கொள்ளும் புதிய பிரச்சினைகள் படைப்புலகின் பேசு பொருளாயிருக்கின்றன. ஆங்கில புலம்பெயர் நாவல் இலக்கியத்தில் இவை ஏற்கனவே பேசப்பட்ட பொருள். தமிழ் இப்போதுதான் இப்புதிய பிரதேசத்தைச் சென்றடைந்திருக்கிறது. ஆனாலும் தமிழினத்தின் ஆயிரமாயிரமாண்டுக் கலாசார பின்னணியில் இவைகொள்ளும் நேர்மறையானதும் எதிர்மறையானதுமான சங்காத்தங்கள் துல்லியமான பிரிகோடுடையவை. மேற்குலகும் கீழ்த்திசையும் வெகு கவனம் கொண்டிருக்கிற விமர்சனப் பக்கமிது. “நதிமேல் தனித்தலையும் சிறுபுள்” இவற்றை ஒரு ஒழுங்கிலும் சமகால வரலாற்றிலும் வைத்து புரிய முயல்கிறது. இப் புரிதல் இச்சமூகங்களது இருத்தலின் தன்மையை இனிவரும் காலங்களில் தீர்மானிக்கப்போகின்ற அளவு முதன்மை கொண்டிருக்கிறது. கலையை முதன்மைப் படுத்தினாலும் இதைப் பேசுகிற அக்கறையை இப்படைப்பு தன் அறமாகக் கொண்டிருக்கிறது.” (தேவகாந்தன் -என்னுரையில்).
Super Moolah Slot Review 2025 Free la playa slot machine Gamble Demonstration
Blogs La playa slot machine | Totally free Ports On the internet in the united kingdom Check in To try out In the Mecca Games