14774 நான் என் அம்மாவின் பிள்ளை (பாகம் 1).

இளையதம்பி தங்கராசா. கனடா: நாவற்குடா இளையதம்பி தங்கராசா, 4000 King Road, King City, Ontario L7 B1K4, 1வது பதிப்பு, 2015. (Canada: A Fast Print, 2703 Eglinton Avenue East). xxvii, 484 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. மட்டக்களப்புப் பிரதேசத்தின் நாவற்குடாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இ.தங்கராசா. இலங்கை மத்திய வங்கியில் ஆய்வுத்துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றபின்னர் கனடாவிற்குப் புலம்பெயர்ந்த இவர் 22.08.2017இல் அங்கு அமரத்துவமடைந்தவர். இந்நாவலில் கிழக்கிலங்கை மக்களின் பண்பாட்டு மரபுகள் மிக நுட்பமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மக்களின் வாழ்வியல், பொருளாதாரம், பண்பாடு, மொழி வழக்கு, இலக்கியம், கலைகள், தொழில்முறைகள், சமூக அமைப்பு எனப் பல செய்திகளைப் பதிவுசெய்துள்ளார். இலங்கையில் பிறந்த அகத்தியன் என்னும் இளைஞன் இனப்பிரச்சினை காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி கப்பலில் பயணம் செய்து, அமெரிக்கத் துறைமுகம் ஒன்றில் அகதியாக இறங்குகின்றான். பத்தி என்ற பெயருடன் கப்பலில் பணிசெய்த பணியாளன் ஒருவன் அந்த நேரத்தில் இறந்துவிட, அவன் பெயரில் அமெரிக்காவில் நுழைந்து கல்வி கற்று, அணுசக்தி குறித்த பேரறிவு பெற்ற அறிவியலாளனாக, அமெரிக்காவின் சொத்தாக உயர்வு பெறுகின்றான். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து, தாயக நினைவுடன் இலங்கை வந்து, தம் மட்டக்களப்பு மக்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பல வகை முயற்சிகளைச் செய்வதும், தாயகத்தில் தாம் திருமணம் செய்துகொள்வதுடன் தம்மைச் சார்ந்தவர்களுக்குத் திருமணம் செய்துவைத்து, அனைவருடன் மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்லும் நிகழ்வுகளும்தான் புதினத்தின் கதைக்களமாகும்.

ஏனைய பதிவுகள்

16990 நோபல்பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 04 (1936-1949).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: