மொழிவாணன். கொழும்பு 13: நீரஜா பப்ளிக்கேஷன்ஸ், 248/83, ஆட்டுப்பட்டித் தெரு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1982. (கொழும்பு: மொடர்ன் பிரின்டர்ஸ்). viii, 100 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 9.90, அளவு: 17.51×2 சமீ. இது ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணனின் ஆறாவது நாவல். தினகரன் வார மஞ்சரியில் தொடராக வெளிவந்தது. இலங்கையின் மாடல் அழகியான குமாரி அஞ்சலாவின் (துர்கா) கவர்ச்சிப் புகைப்படங்களுடன் இந்நூல் வெளிவந்துள்ளது. ஒரு பெண் பயங்கரவாதியின் உண்மைக்கதை என்ற விளம்பரத்துடன் வெளிவந்துள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேசத்துப் பொலிஸ் தலைமைக் காரியாலயத்தின் பதிவேடுகளில் உள்ள குறிப்புகளின்படி துர்காதேவி 10.10.1933இல் நாஜிபாபாத் கோட்டையில் பிறந்துள்ளதாகவும், சுமார் 700 கொலைகளையும், 699 கொள்ளைகளையும் மேற்கொண்டதாவும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். மென்மையான உள்ளம் கொண்ட ஒரு பெண் எப்படி கொடுமையான பயங்கரவாதியானாள் என்பதை சுவையுடன் இந்நாவலில் விபரித்துள்ளார். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17371).