இ.தியாகலிங்கம். சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா காலனி, முதலாவது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா காலனி). 230 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14 சமீ., ISBN: 978-93- 81322-27-7. நோர்வே நாட்டுக்குப் பல பெருமைகள் உள்ளன. தனிநபர் வருவாய் அதிகம் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் நோர்வேயும் ஒன்று. அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு. சமத்துவ, சமூகநலன் சார்ந்த கொள்கைகள் கொண்ட நாடு. இந்த சொர்க்கபுரியின் மற்றொரு பக்கத்தை ஆசிரியர் இந்நாவலில் ஆரவாரமின்றித் திரைநீக்கம் செய்துவைத்துள்ளார். நோர்வேயில் ஈழத்தமிழர் மட்டுமல்ல, பாக்கிஸ்தான், போலந்து, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் பலர் புலம்பெயர்ந்து இங்கே வாழ்கின்றார்கள் இவர்கள் புலம்பெயர்ந்தோரா அல்லது பராரிகளா என்ற கேள்விக்கு இந்நாவல் விடைகாண முயல்கின்றது. பலரின் போலி நம்பிக்கைகளை இந்நாவல் தகர்த்தெறிந்துள்ளது. ஒஸ்லோ என்னும் மாநகரின் பகட்டுத் திரைகளுக்குப் பின்னால் நடக்கும் ஒன்பது அவலங்களை ஒரு மனிதனின் அன்றாட வாழ்வினூடாக, அவன் பார்வையூடாக சொல்லவிளைகின்றது இந்நாவல்.