செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10A, பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, நவம்பர் 2015. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி). (6), 7-77 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300.00, அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-1624-18-7. சாஹித்ய ரத்னா செங்கை ஆழியான் எழுதிய 54ஆவது நாவல். தினகரன் வார மஞ்சரியில் 2011இல் தொடராக வெளிவந்திருந்தது. கடந்து சென்ற முப்பது ஆண்டுகள் நடந்த யுத்தமும், இடப்பெயர்வும், அழிவுகளும், மனித உயிர்களின் இழப்புகளும் எவ்வாறு சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்நாவலின் கருவாகக் காணமுடிகின்றது. அத்துடன் புலம்பெயர் மக்களிடையே ஏற்பட்டுள்ள சமூக, கலாச்சார மாற்றத்தையும் இந்நூல் மூலம் ஆசிரியர் எடுத்துக்கூறியுள்ளார். வடமாகாணத்தில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்துவமாகவிருந்த கலாச்சாரம், ஒழுக்க விழுமியங்கள், பிரதேச வழமைகள் என்பன போரின் காரணமான இடப்பெயர்வுகளாலும், கலாச்சார குழப்பங்களாலும் மாறுபட்டுக்கிடப்பதையும் ஆசிரியர் இந்நாவலில் வெளிச்சமிட்டுக் காட்டத் தவறவில்லை.