மலரன்பன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2019. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). xix, 20-248 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-00- 0042-0. இந்நாவல் இலங்கையின் றப்பர் தோட்டங்கiயும் அங்கு வாழும் மக்களின் வாழ்வியலையும் பேசுபொருளாகக் கொண்டது. பழைய மலை இறப்பர் மரங்களை விறகுக்காகப் பேரம் பேசுதல், கமிஷன் பெறுதல், வேலை நாட்குறைப்பு, தொழிற்சங்கப் போராட்டம் என்று படிப்படியாக கதை சுவாரஸ்யமாக வளர்க்கப் படுகின்றது. வாசகரை மாத்தளை மாவட்டத்தின் தோட்டங்கள் பல வெள்ளையர்களால் உள்ளூர் தனவந்தர்களுக்கு விற்கப்பட்டு, அத்தோட்டங்களை வாங்கிய சில உள்ளூர் தனவந்தர்கள், வெள்ளையர்களின்கீழ் பணியாற்றிய உள்ளூர் உத்தியோகத்தர்களையே தோட்டத்துரைகளாகவும் நியமித்துவந்த அறுபதுகளின் பின்னிறுதியில் மாத்தளைப் பிரதேசச் சமூகச் சூழல் எவ்வாறு இருந்ததென்பதை விபரிக்கும் ஆசிரியர், அதன் ஆரம்பகாலச் சூழ்நிலையை தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றார். தோட்ட வாழ்க்கை முறை மாற்றமடைந்து கிராம வாழ்க்கை முறைக்கு மக்கள் பரிமாண வளர்ச்சியடையும் இக்காலகட்டத்தில் இப்பிரதேசத்தின் முன்னைய தோட்டப்புற வரலாறு எவ்வாறிருந்தது என்பதை ஆவணப்படுத்துகின்றது இந்நாவல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65499).