மலரன்னை (இயற்பெயர்: திருமதி அற்புதராணி காசிலிங்கம்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்கழி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 78 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-0958-23-8. விவாகரத்தின் மூலம் பிரிந்து வாழும் இருவரின் தவிப்பினையும், அவர்களின் மன உணர்வுகளையும் இந்நாவல் விபரிக்கின்றது. திருமண பந்தத்தில் இணையப்போகும் இளம் தம்பதியினருக்கு இந்நாவல் ஒரு அறிவூட்டலாக அமையும். இல்லற வாழ்க்கை என்பது நிலை தளம்பாமல் இருக்க புரிந்துணர்வு, பிறரை அனுசரித்துப் போகும் தன்மை, விட்டுக் கொடுத்தல் என்பன இன்றியமையாத காரணிகளாகும். இவற்றை மையமாகவைத்து இந்நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. மொழியின் வழியே எளிமையாக கட்டமைக்கப்படும் மலரன்னையின் கதையாடல்கள் அவலப்படும் மக்களின் வாழ்வை பின்புலமாகக் கொண்டவை. தனி மனித ஒழுங்கு, சமூக ஒழுங்கு குறித்து எழுதப்படும் இவ் வகையான புனைவுகள் நன்னெறியைப் புகட்டி சன்மார்க்க நெறியில் பயணிப்பவை. இந்நூல் ஜீவநதி வெளியீட்டகத்தின் 134ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது.