14808 யோகி (நாவல்).

நீ.பி.அருளானந்தம். நாவலப்பிட்டி: திருமகள் பதிப்பகம், இல. 10, பெனடிட் அவென்யூ, பவகம, நாவலப்பிட்டி, 1வது பதிப்பு, மார்கழி 2018. (தெகிவளை: ஏ.ஜே. பிரிண்ட், இல. 44, புகையிரத நிலைய வீதி). xii, 229 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-955-1055-16-5. ஆன்மீக ஈடுபாடுள்ள ஒரு இளைஞன் சில குருமார்களால் வழிப்படுத்தப்படுகின்றான். அவனது அறிவு, “யோகம்” பற்றிய தேடலில் இறங்குகின்றது. உண்மை யோகம் பற்றி அறிய முற்படும் அவன், ஒன்றுதல் தான் யோகம் எனும் உண்மையை உணர்கின்றான். அவ்வொன்றுதலை உலகியலைக் கடக்காமல், இயற்கையிலேயே அனுபவிக்க முடியும் எனத் தெளிந்து, இயற்கையுடன் ஒன்றுதலையே தனது வாழ்வாக்கி, உலகியலைத் துறக்காமலே வாழ்வியலில் யோகத்தைப் புரிந்துகொள்ள அவன் முடிவுசெய்வதாய் இந்நாவல் தொடர்கின்றது. பல்துறை சார்ந்த ஈர்ப்புகளுக்கும் கவனச் சிதறல்களுக்கும் மத்தியில், இன்றைய ஒருசில இளைஞர் மனங்களிலும் யோகமுயற்சி படிப்படியாய் பதிவாவதை, ஆசிரியர் காட்டியிருக்கும் விதம் அற்புதமானது. அதே நேரத்தில் இயற்கையோடு ஒன்றிச் சமூக வாழ்க்கைக்குப் பயன்செய்யும் வண்ணம் யோகத்தைப் புதுமையாய்ப் பதிவுசெய்ய விரும்பும் அவ்விளைஞனின் முயற்சியினூடாக, மேற்சொன்ன யோகம் போன்ற சமய விடயங்கள், சமூகத்தைப் புறக்கணிப்பவை அல்ல என்பதையும் ஆசிரியர் பதிவுசெய்திருக்கிறார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 066408).

ஏனைய பதிவுகள்

Nyc Web based casinos 2024

Posts Do you know the Renoir Wide range Rtp and Volatility? Renoir Money Reputation Review Improve A good Toast So you can H5g’s Latest Party