14149 நல்லைக்குமரன் மலர் 2006.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). x, 136 + (48) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ. நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 14ஆவது மலராக 2006 ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகளுடன் நல்லூக் கந்தன் காட்சியும் மாட்சியும் (நா.க.சண்முகநாதபிள்ளை), கந்தன் போற்றி மாலை (வ.யோகனந்தசிவம்), இனியாவது அருள்வாய் (இரா.ஜெயபாலன்), இன்றைய இளைஞர் நாளைய தலைவர் இவ் இளைஞருக்கு ஒரு செய்தி (மு.திருநாவுக்கரசு), இளகாதோ இதயம் ? (த.ஜெயசீலன்), நல்லைக்கந்தன் கருணை (ஆறுமுகம் பேரின்பநாதன்), நல்லைக் கந்தன் வடிவேலவா (ச.தங்கமயிலோன்), ஏம வைகல் பெறுக யாம் (மனோன்மணி சண்முகதாஸ்), இந்து சமயத்தில் குரு தத்துவம் (சிவ. மகாலிங்கம்), கருப்பொருளும் தெய்வமும் (அ.சண்முகதாஸ்), அருள் தரும் முருகனே (கிருஸ்ணசாமி ஜமுனாதேவி), யாம் இரப்பவை (வி .சிவசாமி), மென்மை கொள் சைவநீதி (கோ.வேலாயுதம்), வெற்றிவேல் முருகா (ம.கணேசலிங்கம்), இறைவனையும் ஆன்மாவையும் இணைக்கும் அற்புதமான கலைவடிவம் தேர் (ஸ்ரீபதிசர்மா கிருஷ்ணானந்தசர்மா), காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேள் (பொ.சிவப்பிரகாசம்), பற்றுக்கள் நீக்கினால் காண்பது தண்டபாணி வடிவமே (செ.பரமநாதன்), முருக வழிபாடு (ஆ.சபாரத்தினம்), நல்லைக் குமரா எழுந்தே வா (மீசாலையூர் கமலா), யாழ்ப்பாணத்து ஆறுமுகசுவாமிகள் (க.குணராசா), மேற்கு நாடுகளில் சைவத் தமிழ் கலாசாரம் (கலைவாணி இராமநாதன்), குறிஞ்சிக் குமரன் (அம்பிகை நடராஜா), இந்துப் பண்பாடு மரபில் அன்னதானம் (ப.கணேசலிங்கம்), கந்தா சரணம் (கிருஸ்ணசாமி கிரிசாம்பாள்), அறிவியல் நோக்கில் இந்துமதம் (விக்னேஸ்வரி பவநேசன்), திருக்கார்த்திகை தீப மகிமை (சிவ. வை. நித்தியானந்தசர்மா), ஆதிரையில் ஆரம்பமான தைந் நீராடல் (மட்டுவில் ஆ. நடராசா), சாக்தத்தில் ஸ்ரீ சக்கரம் (நா.சிவசங்கரசர்மா), குமரவேள் திருமுன் உற்றால் தூயவர் ஆதல் திண்ணம் (சி.அப்புத்துரை), வரவேண்டும் முருகா (கிருஸ்ணசாமி சுவர்ணா), சிவலிங்க வடிவும் வழிபாடும் (வை.சி.சிவசுப்பிரமணியம்), யாழ்ப்பாணத்துப் பண்பாட்டில் சோதிடம் (மா.வேதநாதன்), தமிழர்க்கு வாழ்வு தரும் வேல் (கனகசபாபதி நாகேஸ்வரன்), திருமந்திரம் கூறும் தத்துவக் கருத்துக்கள் (துரைராஜசிங்கம் இராஜன்), நேர்த்தியும் யாத்திரையும் – நல்லூர் (க.கனகராசா), ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமான் (கா.கணேசதாசன்), மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வரலாறுக் குறிப்பு (சு.து.சண்முகநாதக்குருக்கள்), செல்வச்சந்நிதி முருகன் ஆலய வரலாறும் அதன் மகிமையும் (கதிர்காமு நாகேந்திரராசா), தொல்லைவினை தீர்க்கும் நல்லைக் கந்தன் (இராசையா (யோகேஸ்வரி சிவப்பிரகாசம்), பொருளுணர்ந்து சொல்லுதல் (தி.பொன்னம்பல வாணர்), பெரியபுராணம் – அடியார் புராணமா? (வ.கோவிந்தபிள்ளை), எழுதிச் செல்லும் விதியின் கையில் (எஸ்.நடராஜா), ஈழத்தில் சைவ ஆலயங்களும், அறபோதனைகளும் (ஆறு. திருமுருகன்), நல்லைக்குமரன் மலர் 2006 இல் யாழ் விருது பெறும் எமது முன்னாள் தலைவர் வைத்திய கலாநிதி இ. தெய்வேந்திரன் அவர்கள் (இ.இரத்தினசிங்கம்), ஓராண்டு நிறைவில் (இ.இரத்தினசிங்கம்), நல்லைக்கந்தா (து.சோமசுந்தரம்) ஆகிய படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14012).

ஏனைய பதிவுகள்

several Just Slots games The Droid

Articles Exactly where Can you Find the right Us Cell Roulette Meets? Just how can Interface Competitions Work at Cell? Exactly what are Pay Through