14150 நல்லைக்குமரன் மலர் 2007.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக் குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). Viii, 154 + (36) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25ஒ18 சமீ. நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 15ஆவது மலராக 2007 ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகளுடன் நல்லூரெம் பெருமானை நான் கண்டவாறு (ச.தங்கமாமயிலோன்), உலகிற்கு ஓர் செய்தி (மு.திருநாவுக்கரசு), முறையீடு (த.ஜெயசீலன்), காதலியுங்கள் ‘நல்லைக்குமரனை” காலமெல்லாம் காத்தே அருளுவான் (வ. யோகானந்தசிவம்), ஆறுமுகசுவாமி அருளிட வா (மீசாலையூர் கமலா), பரமபதம் அருளிடுவாய் (இராசையா ஸ்ரீதரன்), நல்லைக்குமரன் கும்மி (க.முத்துவேலு), நல்லைப் பதியான் (அல்வாயூர் சி.சிவநேசன்), இரதமூர்ந்து வருக (கு.கமலாம்பிகை), உமைஅரனின் பாலகனே (அ.கி.ஏரம்பமூர்த்தி), காலம் வந்துவிட்டது (ஐ.சண்முகலிங்கம்), நல்லூரான் நல்லவழி காட்டிடுவார் (சு.அருமைநாயகம்), ஏழை எனக்கருள்வாய் (க.வள்ளியம்மை), சைவம் ஒரு வாழ்வியல் (மனோன்மணி சண்முகதாஸ்), திருச்செந்தூர் முருகன் தோத்திரம் (வி. சிவசாமி), கார்த்திகை நாதா வா முருகா (மீசாலையூர் கமலா), கந்தர் அலங்காரம் (சிவ.மகாலிங்கம்), வருவாய் வருவாய் முருகா (ம.புவனா), ஈழத்தில் செல்வாக்குற்ற மயூரகிரிப் புராணம் (ஈச்வரநாதபிள்ளை குமரன்), விழுமியப் பண்புகளை வளர்த்தெடுப்பதில் இந்து ஆலயங்களின் பங்களிப்பு (எஸ்.கே. யோகநாதன்), பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோற்றம்பெற்ற இந்து சமய நிறுவனங்கள் (சாந்தினி அருளானந்தம்), தனிப்பாடல் காட்டும் முருகன் (செல்வஅம்பிகை நடராஜா), பாரதியின் முருகன் பாடல்கள் (அ.சண்முகதாஸ்), கண்கண்ட தெய்வமே முருகா நல்லூரான் திருவடியே தஞ்சம் (சிவனேஸ்வரி பாலகிருஷ்ணன்), நல்லையில் அமர்ந்திருந்து ஞானநடம் புரிபவனே (இராசையா ஸ்ரீதரன்), கந்தபுராணம் காட்டும் முருகன் (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்), ஆலயங்களும் மகோற்சவங்களும் (சிவ.வை. நித்தியானந்தசர்மா), உலக நாடுகளில் பாம்பு வழிபாடு (ப.கணேசலிங்கம்), ஐந்தும் அரனும் (ப.சிவானந்தசர்மா), முக்திக்கு வழிகாட்டும் முத்துக்குமரன் (சு.து.ஷண்முகநாதக் குருக்கள்), பெரிய(வன்) புராணம் (வ.கோவிந்தபிள்ளை), தமிழ் கடவுள் முருகனும் தெய்வத் தமிழும் (வை.சி.சிவசுப்பிரமணியம்), நவக்கிரக வழிபாடு (முருகேசு முரளிதரன்), சரவணபவ என்னும் திருமந்திரந்தனை சதா ஜெபியென் நாவே (கனகசபாபதி நாகேஸ்வரன்), மனமே என்னை மீட்டுவிடு (மலர் சின்னையா), பந்தவினையறுத்தே பரமபதம் தந்திருவாய் (இராசையா ஸ்ரீதரன்), அருள்சுரக்கும் நல்லைத் திருவூர் (மூ.சிவலிங்கம்), அபரக்கிரியை சில சிந்தனைகள் (ஸ்ரீபதிசர்மா கிருஷ்ணானந்தசர்மா), பிரார்த்தனை செய்வோம் (யோகேஸ்வரி சிவப்பிரகாசம்), பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருள் ஒன்றே (யோகேஸ்வரன் அஜித்), கோயிலும் இசைக்கலையும் (தயாளினி நவநீதகிருஷ்ணன்), நல்லூரானே (சி.என்.துரைராஜா), சமகால செல்நெறியில் அருகிவரும் மனித விழுமியங்கள் (சுகந்தினி ஸ்ரீமுரளிதரன்), நடனம் ஆடினார் (பொ.சிவப்பிரகாசம்), சமய வாழ்விற்கும் சூழலுக்குமிடையிலான தொடர்பு விருத்தி பற்றிய ஒரு நிபந்தனை (கலைவாணி இராமநாதன்), சிவயோக சுவாமிகளின் நம்பிக்கை நட்சத்திரம் (த.ந.பஞ்சாட்சரம்), பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க (ஆறு. திருமுருகன்), திருமுருகப் பெருமானின் திரு அவதாரத் தோற்றங்கள் (கணேசன் சைவசிகாமணி), 2007 இல் யாழ் விருது பெறும் உயர்திரு வே.பொ. பாலசிங்கம் அவர்கள் (இ. இரத்தினசிங்கம்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 15052).

ஏனைய பதிவுகள்

Magic Kingdom Kostenlos Spielen

Content Eye of Horus Cheats-Slot-Freispiele – Free Spins Added Bonus Die Gesamtheit Qua Diesseitigen Pharaos Riches Book Of Ra Umsetzbar Für Jedes Nüsse Spielautomaten, Seine

Finest Online slots Us

Content Higher Harbors Incentives Every time Try 100 percent free Slot Games The same as A real income Harbors? Justice Group Cellular Position Game Reels

17178 வாழ்க்கை ஒரு வாய்ப்பு: கட்டுரைக் களஞ்சியம்.

வடகோவை பூ.க.இராசரத்தினம் (இயற்பெயர்: கந்தப்பு இராசரத்தினம்). கொழும்பு 6: வடகோவை பூ.க.இராசரத்தினம், ஓய்வுநிலை அதிபர், 36/2A, 37ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 168 பக்கம்,