14822 அசையாத மலைத்தொடர்.

கமல் பெரேரா (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2015. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 280 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 23×15 சமீ., ISBN: 978-955-30-6576-6. சிங்கள புனைகதை உலகில், எண்பதுகளில் பிரபல முன்னணிப் படைப்பாளிகளில் ஒருவர் கமல் பெரேரா. சிறுகதை, நாவல், பத்தி எழுத்து போன்ற பல்துறை சார்ந்த நூல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார். இவரது திறந்த கதவு என்ற சிறுகதைத் தொகுதியும் பொன்தாமரைக்குளம் என்ற இளையோர் நாவலும் முன்னர் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. இது இவரது மூன்றாவது தமிழ் மொழிபெயர்ப்பு நூலாகும். இந்நாவல், சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளில் சிக்குண்டு அப்பாவிகளாக வாழும் மலைக் கிராமத்தவர்களின் கண்ணீர்க் கதையின் ஒரு வெட்டுமுகத்தை, 1971இல் இடம்பெற்ற இளைஞர் கிளர்ச்சிப் பின்னணியில் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதில் வெற்றிபெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

14467 சித்த மருத்துவம் 1985.

எஸ்.எல்.சிவசண்முகராஜா, பி.வி.விமலதாஸ் (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1985. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (12), 40 + (28) பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: