14829 மிகப் பெரும் ஆயுதக் களைவு.

யுஆன் ஹெளசுன் (ஆங்கில மூலம்), மு.பொன்னம்பலம் (தமிழாக்கம்). பத்தரமுல்ல: நெப்யூன் பப்ளிக்கேஷன்ஸ், 302, பஹலவெல வீதி, பெலவத்தை, 1வது பதிப்பு, 2018. (பத்தரமுல்ல: நெப்யூன் பப்ளிக்கேஷன்ஸ், 302, பஹலவெல வீதி, பெலவத்தை). (4), 274 பக்கம், விலை: ரூபா 680., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-7496- 54-2. யுஆன் ஹெளசுன் இன்றைய சீனாவின் படைத்தரப்பின் சீர்திருத்த எழுத்தாளராகவும் படைத்துறை ஊடகவியலாளராகவும் பணியாற்றுபவர். அச்சமில்லாத ஆக்கபூர்வமான எழுத்தாற்றல் கொண்டவர். இவர் இந்நூலை ஆய்வுரீதியான சீன வரலாற்று நாவலாகவும், கவித்துவச் செறிவுள்ள கட்டுரையாகவும் எழுதியுள்ளார். 1985இல் டெங்சியா ஓபிங் தன் எதிர்காலப் பார்வைக்கு எட்டிய அளவில் உலக யுத்தம் ஏற்படப் போவதில்லை என்று எதிர்வுகூறி, நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பி, சீனாவின் படைத்தரப்பினை அடியோடு மாற்றியமைக்கத் தீர்மானம் எடுத்தார். 1987இல் ஒரு மில்லியன் படையினர் படைத்தரப்பிலிருந்து கலைக்கப்பட்டனர். இந்த அடிப்படை மாற்றத்தின் மூலம் சீனாவின் ஆண்களும் பெண்களும் முகம்கொடுத்த முற்றுமுழுதான துன்பியல், இன்பியல் அனுபவங்களானது சீனா, சீனப்படைத்தரப்பு, பற்றிய இக்காலத்திற்குரிய தரிசனத்தை சுவையோடு வழங்குகின்றது. அவர்களது காதல், வெறுப்பு, விசுவாசம், அவாஞ்சை ஆகியவற்றின் கதைகள் உங்களோடு நீண்டகாலத்திற்கு நிற்கும் வகையில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65515).

ஏனைய பதிவுகள்