தொல்புரக்கிழார் (இயற்பெயர்: நா.சிவபாதசுந்தரம்). யாழ்ப்பாணம்: நா.சிவபாதசுந்தரன், தமிழ் நிலை, தொல்புரம், 1வது பதிப்பு, 1955. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 213, காங்கேசன்துறை வீதி). iv, (8), 56 பக்கம், விலை: 75 சதம், அளவு: 20.5×14 சமீ. மூன்று அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள இந்நூல், கண்ணகி-கோவலன் கதையை இலக்கிய நயத்துடன் கூறுகின்றது. புகழ் நிலைபெற்ற பூம்புகார் என்ற முதலாவது பாகத்தில் பூம்புகாரின் பொலிவு நிலை, பூம்புகாரில் பூத்த புதுமணம், கணிகை இன்பத்தில் கண்ணகி துன்பம், இந்திர விழாவும் இன்பமுறிவும், மனம் நொந்த கோவலன் மதுரை நோக்கல், நாடும் காடும் நடந்த காட்சி ஆகிய இயல்களும், மறைவினைக்கு உறவான மதுரை என்ற இரண்டாம் பாகத்தில் மதுரை வீதியில் மலர்ந்த விதி, கணவனை இழந்த கண்ணகி, பாண்டியன் முன் பத்தினிப்பெண், விண்ணுலகடைந்த வீரக்கண்ணகி ஆகிய இயல்களும், வஞ்சி வணங்கிய வானுறை தெய்வம் என்ற இறுதிப் பாகத்தில் குன்றக் குறவரில் குடிகொண்ட கண்ணகி, சிலை எடுக்க எழுந்த சித்திரம், நீள்வீரர் நின்ற நீலகிரி, வீரத்தமிழர் விரித்த போர், மன்னர் முடியெறிய மாடலன் கண்ணகி, ஆர்வமும் உவகையும் அளந்த வஞ்சி, கண்ணகி கோயிலில் கண்ணகி ஆகிய இயல்களும் இடம்பெற்றுள்ளன. இறுதி நான்கு பக்கங்களில் அரும்பதவுரை இடம்பெற்றுள்ளது.
Awesome Lion Slots Online Skywind Casino slot games
Posts Register Lion Dance Invited Extra How many productive spend outlines might be played within the fifty Lions? New jersey Continues Force in order to
 
				