பொ.கனகசபாபதி. கனடா: அமரர் பொ. கனகசபாபதி நினைவு வெளியீடு, ஜனவரி 2015. (கனடா: பிரின்ட் பாஸ்ட்). xi, 110 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 978-955- கனடா மண்ணில் சுமார் கால் நூற்றாண்டை தமிழினப் பண்பாட்டின் அடையாளமாகவே வாழ்ந்து மறைந்தவர் மஹாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர், அமரர் பொன்னையா கனகசபாபதி. அவர் 2013 ஜுன் மாதம் கனடாவில் சுகவீனமுற்றார். அவரது உடல்நிலை படிப்படியாகப் பாதிப்படையத் தொடங்கிய வேளையில் பல மருத்துவர்களிடமும் மருத்துவ நிபுணர்களிடமும் சென்றுவர வேண்டி ஏற்பட்டது. முற்றிலும் குணமடையாத நிலையில் தனது ஆதங்கத்தையும் அனுபவத்தையும் காலத்துக்குக் காலம் தாய்வீடு பத்திரிகையில் நினைவின் பதிகைகளாக எழுதத் தலைப்பட்டார். அத்தகைய “நோயில் இருத்தல்” பற்றிய ஆக்கங்களின் தொகுப்பே இதுவாகும். இந்நூலில் நோயாளி விதியாளியானால் பரியாரி பேராளி, ஆண்டவன் படைச்சான் அனுபவி ராசா என நோயையும் அனுப்பிவைச்சான், அவனுக்கென்ன சொல்லிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா, உறக்கம் இல்லாவிட்டால் ஞானம் பிறக்குமா?, உப்பற்ற சாப்பாட்டை குப்பையில் போடு, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே, எல்லோரும் ஏறிய வண்டியில் சக்கிடுத்தார் ஏறிச் சறுக்கி விழுந்தாராம், நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி, சோதனைமேல் சோதனை போதுமடா சாமி, காடு வா என்கிறது வீடு போ என்கிறது, உற்றான் அளவும் பிணியளவும் காலமும் மருத்துவன் கருதிச் செயல், விகடராமன் குதிரை மாதம் போம் காத வழி, நாளொரு வைத்தியசாலை பொழுதொரு வைத்தியர், அதாயிருக்கலாம், இதாயிருக்கலாம், எதாயிருக்கலாம்?, டொக்டர் லம்போவின் வினா வினயமானதே, டொக்டர் லம்போவின் வினாவிற்கு இதுதான் விடையா?, இரவல் புடவையில் இது நல்ல கொய்யகமாம், ஒவ்வொருத்தராகக் கை கழுவி விடுகிறார்களா? ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இந்நூல் அமரர் பொ. கனகசபாபதி அவர்களின் மறைவின் 31 வது நினைவு தினத்திலன்று அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65156).