14845 தமிழ்மறைக் கட்டுரைகள்.

கா.பொ.இரத்தினம் (பதிப்பாசிரியர்). சென்னை 04: இன்ப நிலையம், மயிலாப்பூர், 1வது பதிப்பு, மே 1959. (சென்னை 14: மாருதி பிரஸ், 83, பீட்டர்ஸ் ரோடு). viii, 9-244 பக்கம், விலை: இந்திய ரூபா 3.50, அளவு: 18×12.5 சமீ., 23.11.1952 இல் பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்களால் தமிழ்மறைக் கழகம் தாபிக்கப்பட்டது. அவ்வமைப்பினூடாகத் தமிழ்மறைத் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பெற்று பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இலங்கைத் தமிழ்மறைக் கழகம் நடத்திய அகில உலகத் தமிழ்மறைக் கட்டுரைப் போட்டியில் பரிசில்களும் பாராட்டிதழ்களும் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். இதில் வித்துவான் கா.பொ.இரத்தினம் அவர்களின் முன்னுரையுடன் திருவள்ளுவர் காலம் (நா.தங்கவேலன், மதுரை), திருக்குறளில் நவரசங்கள் (க.குகதாசன், நயினாதீவு), திருவள்ளுவ மாலை (வை.அபரஞ்சி, திருப்பத்தூர்), பொது மறை (அ.ச.அப்துல் சமது, அக்கரைப்பற்று), வாழ்வுக்கலை (பொ.அரும்பொன், விராச்சிலை), தேடக் கிடைக்காத செல்வம் (த.சபாரத்தினம், அரியாலை), வள்ளுவர் வகுத்த அரசு (ரா.சாம்பசதாசிவம், கோயம்புத்தூர்), வள்ளுவர் கண்ட பெண்மை (சி.சிவபாக்கியம், அரியாலை), திருக்குறளும் சிலப்பதிகாரமும் (சு.தியாகராசன், திருப்பதி), திருக்குறளும் கீதையும் (சோ.பரமசாமி, இணுவில்), நான் கண்ட வள்ளுவர் (வ.பெருமாள், கொரடாச்சேரி), வாழ்க்கை நூல் (அ.மாணிக்கவாசகன், மேலைச் சிவபுரி), வள்ளுவர் கண்ட வாழ்க்கைத்துணை (மு.மோகனரங்கன், திருப்பதி), வள்ளுவரின் சொல்நயங்கள் (ச.விவேகானந்தசாமி, குன்னூர்) ஆகிய கட்டுரைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31547).

ஏனைய பதிவுகள்

17388 திருக்குர் ஆன் இயற்கை மருத்துவம்: xS(Whulu) என்னும் மருத்துவம்.

நினைவுக்குழு. சாய்ந்தமருது: மர்ஹூம் அல்ஹாஜ் ஆதம்பாபா அப்துல் ரஹீம் நினைவுக்குழு, 360 C, அல் ஹிலால் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2008. (aகொழும்பு 6: Printmax Arabic, Commercial and Academic Printers,