14855 மாத்து: கலை இலக்கியக் கட்டுரைகள்.

த.மலர்ச்செல்வன் (தொகுப்பாசிரியர்). வாழைச்சேனை: கோறளைப்பற்று பிரதேச செயலகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (மட்டக்களப்பு: துர்க்கா அச்சகம்). v, 69 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978- 955-50710-3-1. இந்நூலில் உள்ள கட்டுரைகள் கூத்துச் சார்ந்து, நாடகம் சார்ந்து, வாய்மொழிக் கதைகள் சார்ந்து, நவீனம் சார்ந்து படைக்கப்பட்டுள்ளன. இவை மட்டக்களப்புக் கூத்தரங்கின் ஆற்றுகை முறைமை (த.விவேகானந்தராசா), மட்டக்களப்புத் தமிழர்களின் அன்றாட உணவும் உணவுசார் வழக்காறுகளும் (சி.சந்திரசேகரம்), கல்வியியல் அரங்கும் இணைந்த கலைகளின் பிரயோகமும் (து.கௌரீஸ்வரன்), சடங்குகள் கட்டமைக்கும் தெளிவற்ற குறியீடுகளும் நிலையற்ற நம்பிக்கைகளும் (வ.இன்பமோகன்), மட்டக்களப்பில் சமூக ஜனநாயக மரபினைப் பேணிய வடிவமாக வாய்மொழிக் கதைகள்: ஓர் அமைப்பியல் அணுகுமுறை (சு.சிவரெத்தினம்), கூத்தரங்கில் உடுப்புக் கட்டுதலும் பெண்களும் (ச.சந்திரகுமார்), எமது படைப்பாளிகளும் இலக்கிய மரபுகளை உறிஞ்சுதலும் (செ.யோகராசா), கிழக்கிலங்கை பின் நவீனத் தமிழ்ச் சிறுகதை வெளி (ஜிப்ரி ஹஸன்) ஆகிய எட்டு தலைப்புகளில் எழுதப்பட்ட ஆக்கங்களாக அமைகின்றன.

ஏனைய பதிவுகள்