பா.விக்கினேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). சாவகச்சேரி: தென்மராட்சி இலக்கிய அணி, கிராம்புவில், 1வது பதிப்பு, மார்ச் 2014. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், 276 கஸ்தூரியார் வீதி). viii, 127 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19×12.5 சமீ. இந்நூலில் பல்வேறு தமிழ் புத்திஜீவிகள் எழுதியுள்ள திருக்குறள் சார்ந்த இலக்கியக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவ்வகையில் அ.வாசுதேவா (வள்ளுவரின் வழிநடப்போம்), ஸ்ரீ.பிரசாந்தன் (சங்க அகத்திணை மரபும் திருக்குறட் காமத்துப்பாலும்), பா.செந்தூரன் (இன்றைய இளைஞர்களுக்கு வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறிகள்), சி.வே.ஞானசம்பந்தன் (வள்ளுவருக்குப் பிடித்த மலர்), க.க.ஈஸ்வரன் (சைவசித்தாந்த சிந்தனை மரபில் திருக்குறள்), சோ.கோகுலன் (பெண்மை இலக்கணம்), க.ரஜனிகாந்தன் (வள்ளுவர் காட்டும் காதல் வாழ்வு), மீ.பாரதி (திருவள்ளுவர் கூறும்அறிவு), செ.செல்வரமணன் (திருக்குறளில் அரசியல் கோட்பாடு), த.நாகேஸ்வரன் (வள்ளுவர் வகுத்த அமைச்சுக்காம் அறிவுரை), வே.உதயகுமார் (வள்ளுவர் காட்டும் இல்லறம்), பா.விக்கினேஸ்வரன் (வள்ளுவரும் வாய்மொழியும்), ச.மார்க்கண்டு (ஒரு திருக்குறள்), சோ.பத்மநாதன் (பிளேற்றோவும் திருவள்ளுவரும்) தி.வேல்நம்பி (வள்ளுவர் காட்டும் வாழ்வியல் கருத்துக்கள்), இ.ஜெயராஜ் (வள்ளுவப் புதுமை) ஆகியோர் எழுதிய 18 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.