14858 அல் ஜாமிஆ: மூன்றாவது இதழ்-1422/2001.

ஆசிரியர் குழு. பேருவளை: நளீமிய்யா மாணவர்களுக்கான இதழ், ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமியா, தபால் பெட்டி எண் 1, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (கல்கிஸ்சை: டெக்னோ பிரின்டர்ஸ், 7, 15A, பின்தலியா வீதி, மவுண்ட் லவீனியா). (10), 128 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 28×21 சமீ. எம்.டீ.கே. ஸமான், எஸ்.எச்.எம். பழீல், ஏ.பீ.எம். இத்ரீஸ் ஆகியோரைக் கொண்ட ஆசிரியர் குழுவின் பங்களிப்பில் வெளியிடப்பெறும் மூன்றாவது இதழ் இது. இஸ்லாமியக் கிராமங்களும் அதற்கான சாத்தியங்களும் (எம்.ஏ.எம்.மன்சூர்), ஹிப்ளுல் குர்ஆன் (எஸ்.எச்.எம்.பழீல்), மூன்று கவிதைகள்: அறிவுத் தந்தை, பெற்றார் பெருமை, ஜாமிஆ வாழ்வு (கைருல் பஷர்), அல்குர்ஆனின் நிழலில் ஒரு மானிடன் (எம்.ஏ.அப்துல் மலிக்), உலகமயமாக்கலும் உலகம் தழுவும் இறுதித் தூதும் (எம்.எம்.நியாஸ்), சூழலைப் பாதுகாக்கும் இஸ்லாம் (ஏ.எஸ். எம்.ஜெலீஸ்), தண்டனைக் கோட்பாடுகள்: மேலைத்தேய நோக்கும் இஸ்லாமிய நோக்கும் (எஸ்.எம்.அய்யூப்), இஸ்லாமிய சமூகத்தின் எழுச்சிக்கான நியதிகள் (எம்.ரீ.எம்.றியாஸ்), குடும்பத் திட்டம் – ஓர் இஸ்லாமிய நோக்கு (எம்.என்.ஷம்ஸ் அஹ்மத்), இருபதாம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞர்கள்-சில நினைவுக் குறிப்புகள் (ஏ.ஏ.எம்.பஸீல்), இஸ்லாமிய பொருளாதாரத்தின் ஒழுக்க மாண்புகள் (எம்.ஜீ.ஷஹ்மி அஹ்மத்), பிராணிகள் அறுப்பு முறை ஒரு பகு நோக்கு (எம்.எஸ். றியாஸ் முஹம்மத்), ஒழுக்க விழுமியங்களில் தங்கியிருக்கும் நாகரிகங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஒரு சமூகவியல் நோக்கு (பீ.எம்.எம்.பெறோஸ்), இஸ்லாமிய தஃவாவும் விளிம்பு நிலைப் போராட்டங்களும் (எம்.ஏ.எம்.அஜுன்), பெற்றோர் – பிள்ளைகள் தொடர்பான உரிமைகளும் கடமைகளும் (ஸீ.எம்.எம்.அமானி), தஃவாவில் ஊடகத்துறையின் அவசியப்பாடு (ஏ.ஆர்.பர்ஸான்), இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரம் நேற்று-இன்று-நாளை (எம்.எச்.எம்.றஹ்மான் ஹசன்), ஓர் அகதிப் பெண்ணின் நாட்குறிப்பு (றஜீப் அல்மகலானி), என் நிரந்தர முகவரி- கவிதை, ஸின்னீரா (அப்துல்லாஹ் பின் அஹ்மத்), நளீமிக்களின் பன்முகப் பதிவுகள், 2001 – வரை வெளியிடப்பட்ட நூல்கள் சஞ்சிகைகள், பத்திரிகைகள், நளீமிய்யா கலாபீடப் பட்டப் பரீட்சைக்கு 1995 ஆம் ஆண்டிலிருந்து 1999 ஆம் ஆண்டு வரையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்பு என்பன இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20825).

ஏனைய பதிவுகள்