க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2008. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ). 280+56 பக்கம், புகைப்படம், விலை: கனேடிய டொலர் 25.00, அளவு: 21×14 சமீ. ஈழத்துப் பூராடனார் என அழைக்கப்படும் க. தா. செல்வராசகோபால் (13 டிசம்பர், 1928 – 21 டிசம்பர் 2010) ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர். இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தவர். வட இந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் என்ற பெருமை கொங்குவேண் மாக்கதை என்னும் பெருங்கதைக்கு உண்டு. வேறு எந்தத் தமிழ்க் காப்பியத்திற்கும் இல்லாத தனிச் சிறப்புப் பெருங்கதைக்கு உண்டு என்று அறிஞர் கருதுவர். இது பலவகைக் கருவிகள், பழக்க வழக்கங்கள், கட்டட அமைப்புகள், விளையாட்டுகள் பற்றிய சமுதாயச் செய்திகளை எல்லாம் நுட்பமாகப் பேசும் ஒரு காப்பியம். பெருங்கதை பற்றிப் பழைய உரையாசிரியர்கள் பலர் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இக்காப்பியத்தைப் பாராட்டி உள்ளார். “கபாடபுரத்தில் இருந்த இடைச் சங்கத்தில் இயற்றப்பட்டவை கலியும் குருகும் வெண்டாளியும் முதலிய செய்யுள் இலக்கியங்கள் இந்த இலக்கியங்களை எல்லாம் ஆராய்ந்து செய்ததே “உதயணன் கதை” என்று அவர் கூறியுள்ளார் (உதயணன் கதை – பெருங்கதை). பேராசிரியர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர். தொன்மை முதலிய இலக்கணக் கூறுகளை விளக்கும் இவர் “இயைபு” என்ற இலக்கணத்தை விளக்கி, அதற்குச் சான்றுகளாகச் சீத்தலைச் சாத்தனாரால் செய்யப்பட்ட மணிமேகலை யையும், கொங்குவேளிரால் செய்யப்பட்ட இந்தப் பெருங்கதையையும் குறிப் பிட்டுள்ளார். நச்சினார்க்கினியர், மயிலை நாதர், நேமிநாத உரையாசிரியர், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், வீரசோழிய உரையாசிரியர் முதலியோர் 894.8 (63) சங்க இலக்கியங்கள் தொடர்பானவை நூல் தேட்டம் – தொகுதி 15 489 உரைகளிலும் “பெருங்கதை” மேற்கோளாக இடம் பெற்றுள்ளது. இத்தகைய பெருமை பெற்ற பெருங்கதை, உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கையை விவரித்துச் செல்கிறது. இக்காப்பியத்தை இயற்றிய கொங்குவேளிர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். எனவே இக்காப்பியம் சமணக் கொள்கைகளை மிகுதியும் முன்னிலைப் படுத்துவதாக அமைந்துள்ளது. கொங்குவேண் மாக்கதை எனும் பெருங்கதை பற்றிய ஆய்வினை இந்நூலில் ஈழத்துப் பூராடனார் விபரமாகப் பதிவுசெய்துள்ளார். நூல் முகப்பு, பதிப்புத் தகவல்கள், சமர்ப்பணம், பதிப்பகத்தார் பகர்வன, மின் யுகத்தில் தமிழ் எழுத்து வரிவடிவங்களின் நிலைப்பாடு, படைப்பாசிரியர், நூலாசிரியர் நுகல்வது, நூலின் உள்ளே, ஆய்வு நோக்குகள் (பெருங்கதை ஆய்வு நோக்குஃ காப்பியக் கதைப் பகுதி பெருங்கதையின் சாரம் பற்றிய ஆய்வு நோக்குஃ காப்பிய வரலாற்றுப் பகுதி பெருங்கதையின் படைப்புப் பற்றிய ஆய்வு நோக்கு), பெருங்கதை நூலின் ஆய்வு நோக்கு (உஞ்சைக் காண்ட ஆய்வு நோக்குஃ இலாவண காண்ட ஆய்வு நோக்குஃ மகத காண்ட ஆய்வு நோக்குஃ வத்தவ காண்ட ஆய்வு நோக்குஃ நரவாண காண்ட ஆய்வு நோக்குஃ துறவுக் காண்ட ஆய்வு நோக்குஃ முடிவுரை ஆய்வு நோக்கு) ஆகிய தனித்தனி இயல்களில் இவ்வாய்வு நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4076).
Online casino Tom S casino casino Sites Professional Reviews to have Feb 2025
Posts Casino Tom S casino: Mobile Casino Apps in the Texas How to choose the right Online casino List of the five Best-Rated Online casinos