மலர்க் குழு. மட்டுவில்: பன்றித்தலைச்சி அம்மன் கோவில், மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2007. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). (6), 106 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ 24.10.2007 இல் நடைபெற்ற மேற்படி ஆலய கும்பாபிஷேக விழாவையொட்டி வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். நூலின் அட்டையில் ஆண்டு 2008 என்று குறிப்பிடப்பட்டுள்ளமையைக் கவனத்திற் கொள்க. ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி வர்ணனை, நித்தியநைமித்திய மஹோற்சவ விஞ்ஞாபனம், கும்பாபிஷேக தத்துவம், ஆலய வளர்ச்சி வரலாறு, உலகமே சக்தி மயம், பூஜாகால நேரங்கள், பூசை முறைகள், பராசக்தி வணக்கம், உற்சவங்கள், மஹோற்சவம் வாகன கிரமம், திருவூஞ்சல், திருஞான சம்பந்தர் தேவாரம், திருநாவுக்கரசர் தேவாரம், சுந்தரர் தேவாரம், மாணிக்கவாசகர் திருவாசகம், 9ஆம் திருமுறை- திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, 10ஆம் திருமுறைதிருமந்திரம், 11ஆம் திருமுறை, 12ஆம் திருமுறை- பெரியபுராணம், விநாயகர் தோத்திரம், சிவபெருமான் தோத்திரம், உமாதேவி தோத்திரம், திருமகள் துதி, சரஸ்வதி துதி, திருமாலை துதி, சுப்பிரமணியர் துதி, வீரபத்திரர் துதி, வைரவர் சுவாமி தோத்திரம், நந்திதேவர், சண்டேஸ்வர சுவாமி துதி, அபிராமி அந்தாதி, சிவசக்தி வணக்கம், சக்தி வணக்கம், நவரத்தினமாலை, லலிதா பஞ்சரத்தினம், மஹோற்சவத்தில் ஓதவேண்டிய திருமுறை, கொடிக்கவி, தேரிழுக்கமுன் ஓதவேண்டிய திருப்பல்லாண்டு, அருணகிரிநாதர் திருப்புகழ், சக்தி கவசம், மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம், நன்றியுரை ஆகிய 45 தலைப்புகளில் இம்மலர் பல்வேறு ஆக்கங்களை உள்ளடக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51087).
Free Ports No Install Enjoy 1000+ Which have Bonus Series
Posts Every week, The new Slots Coming! Enjoy Eu Roulette Free of charge With no Deposit Local casino Orgs Latest Free Online game Mobile: Play