க.சிவகுருநாதன், நா.நல்லதம்பி (தொகுப்பாசிரியர்கள்). மட்டுவில்: தேவஸ்தான வெளியீடு, பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் கோவில், மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: யாழ் மாவட்ட கூட்டுறவுச் சங்க அச்சகம்). (16), 70 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 75.00, அளவு: 24.5×18 சமீ. இம்மலரில் சமர்ப்பணம், நற்சிந்தனை, முகவுரை, ஆசிச் செய்திகள், தொடக்கவுரை ஆகியவற்றினைத் தொடர்ந்து, ஆலய வளர்ச்சி வரலாறு, ஒரு கண்ணோட்டம், பன்றித் தலைச்சி அம்மன், தேவஸ்தான பரிபாலனம், கோவில் பதிவு, சக்தி வழிபாடு, அம்பிகையும் தமிழும், கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் (வர்ணனை), கும்பாபிஷேக தத்துவம், சிவநெறி சீர்பெற அன்பு செய்வோம், அம்பிகை அருள், எல்லோருக்கும் பொதுவான சக்தி வழிபாடு, அன்னை வழிபாடு, துவாசாரோகணம், சக்தி தத்துவம், ஸ்ரீ சக்கர பூஜை, மஹோற்சவம், உற்சவங்கள், மகோற்சவ கால வாகனக் கிரமங்கள், ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருஊஞ்சல், பக்தரின் அற்புதத் தெய்வம், தோத்திர மாலை, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம், பன்றித் தலைச்சி அம்பாள் துதி, திருமுறைகள் ஆகிய தகவல்களும் 1946, 1955, 1964, 1991 ஆம் ஆண்டுகளுக்குரிய மஹாகும்பாபிஷேக விஞ்ஞாபனங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 051038).