14165 மணிமொழிகள்: நாவலர் மணிமண்டப திறப்புவிழா நினைவுமலர் 19.05.1995.

மலர்க் குழு. கொழும்பு 15: வடகொழும்பு இந்து பரிபாலன சங்கம், 40, கோவில் வீதி, 1வது பதிப்பு, மே 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 152 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ. 19.05.1995 அன்று வெளியிடப்பெற்ற இச்சிறப்பு மலரில் ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், மணிமண்டபம் கண்டோர் சிரஞ்சீவிகளாவர் (வி.ரி. வி.தெய்வநாயகம்பிள்ளை), இந்துக்களே சிந்தித்துப் பாருங்கள் (வித்துவான் க.ந.வேலன்), நாவலர் பற்றி ஒரு நோக்கு, ஆத்திசூடி விளக்கவுரையுடன், திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை, கொன்றை வேந்தன் ஆகியவை இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34626).

ஏனைய பதிவுகள்