துரை. மனோகரன் (மலராசிரியர்). கண்டி: மத்திய மாகாணக் கல்வி இந்து கலாச்சார அமைச்சு, 1வது பதிப்பு, 2003. (கண்டி: கிராப்பிக் லாண்ட்). x, (2), 85 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ. இந்து சமய அலுவல்கள் அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இரண்டாவது உலக இந்து மாநாட்டின் நிறைவு விழா 2003 மே 6ஆம்திகதி இடம்பெற்ற வேளை, வீடமைப்பு, பெருந்தோட்ட, உட்கட்டமைப்பு அமைச்சின் அனுசரணையுடன் மத்திய மாகாணக் கல்வி, இந்து கலாசார அமைச்சு வெளியிட்டுள்ள இந்து மகாநாட்டுச் சிறப்புமலர் இது. கலாநிதி துரை மனோகரன் அவர்களின் ஆசிரியத்துவத்தின்கீழ் மலர்ந்துள்ள இச்சிறப்பு மலரில் வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன், மலரும் இந்த மலரைப் பற்றி (துரை மனோகரன்), பட்டினத்தடிகள் அருளிச் செய்த திருப்பாடல்கள் (க.அருணாசலம்), கலைமகளும் கவிஞர்களும் (துரை.மனோகரன்), திருமூலரின் திருமந்திரம் (அரங்க. இராமலிங்கம்), யோகம் அழைக்கிறது (நவம் வெள்ளைச்சாமி), திருவாதிரைச் சிறப்பு (சுப.திண்ணப்பன்), சைவசமய வழிபாட்டில் மந்திரங்கள் (ஸ்ரீமத் சர்மா கிருஷ்ணானந்த சர்மா), தெய்வீக மந்திரமாகிய ஸ்ரீ காய்த்ரி மந்திரம் (பிரசாந்தினி மாயாவதாரன்), பல்லவர் காலக் கலை வரலாற்றில் முருகப் படிமங்களது முக்கியத்துவம் (அம்பிகை ஆனந்தகுமார்), இலங்கையில் இந்து சமயம் – ஐரோப்பியர் காலம் ஒரு கண்ணோட்டம் (ஜெயமலர் தியாகலிங்கம்), மலையகத்தில் இந்துசமய இலக்கிய வளர்ச்சி ஒரு நோக்கு (இரா.சிவலிங்கம்), மலையகத்தின் சமூக அசைவியக்கமும் இந்துப் பெண்களும் (இரா.சர்மிளாதேவி), மலையகத்தில் இந்து சமயம் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வு ஆலோசனைகளும் (ச.விஜேசந்திரன்), மலையகத்தில் இந்து சமயக் கல்வி (முத்து சம்பந்தர்), முற்போக்கு எண்ணங்கள் முகிழ வேண்டும் (கே.வெள்ளைச்சாமி), மத்திய மாகாண இந்து ஆலயங்கள் (நுவரெலியா மாவட்டம்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 31061).