கனகலிங்கம் சோமசேகரம் (தொகுப்பாசிரியர்). மீசாலை: தர்மகர்த்தா சபை, மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). xxxii, 300 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 1000., அளவு: 26×20 சமீ., ISDN: 978-955-0414-00-0. ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள் ஆகியவற்றைத் தொடர்ந்து, இம்மலர் ஆலய விடயங்கள், ஆலய ஆய்வும் பிறவும், விநாயகர் (தத்துவம், வழிபாடு, பெருமை, ஆயுதங்கள்), பொது, பாடல்களும் தோத்திரங்களும் ஆகிய ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆலய விடயங்களில் ஆலய மான்மியம், மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவில் அமைவிடம், நித்தியநைமித்திய பூஜை விபரங்கள், வருடாந்த உற்சவ தினங்களின் விபரங்கள், மாவடியான் சேவையில் பொன்விழாக்கண்ட மணியகாரன் அமரர் விநாசித்தம்பி சபாரத்தினம், ஆலய இராஜ கோபுர மகிமை, ஆலய வளர்ச்சிக்கு உதவியோர் பற்றிய விபரம் என இன்னோரன்ன நிர்வாகத் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆலய ஆய்வும் பிறவும் என்ற இரண்டாம் பாகத்தில் மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவில் மற்றும் சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள பிற கோவில்கள் பற்றிய வரலாற்றுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. விநாயகர்: தத்துவம், வழிபாடு, பெருமை ஆயுதங்கள் என்ற மூன்றாம் பாகத்தில் விநாயகர் பெருமை பேசும் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் உள்ளடங்கியுள்ளன. பொது என்ற நான்காவது பாகத்தில் சைவத் திருமுறைகளும் நம்மவர் செல்நெறியும் (ச.லலீசன்), இந்துப் பண்பாட்டு மரபில் பசுவின் பெருமை (ப.கணேசலிங்கம்), ஆலயங்களில் இசை (செல்வி கலாஜினி), ஞானத்தின் படிநிலைகள்-தசகாரியம் (பொ.சந்திரசேகரம்), உளநெருக்கீட்டுக்கான பரிகாரங்களில் ஆலயங்கள் (சந்திரராஜினி கணபதிப்பிள்ளை), பிள்ளைகளின் கற்றல் மேம்பாட்டில் குடும்பங்களின் பங்களிப்பு (மா.சின்னத்தம்பி), திருவும் தமிழும் பரதமும் (சபா ஜெயராசா), வடமொழியும் தென் தமிழும் (இ.குமாரவடிவேல்), மனித வாழ்வியலில் இந்துமதம் ஒரு குறிப்பு (க.தர்மசேகரம்), யாழ்ப்பாணத்தில் மரபுவழித் தமிழ்க் கல்வி (எஸ்.சிவலிங்கராஜா), வீரசைவ மரபில் பசவண்ணர் (சுகந்தினி ஸ்ரீமுரளிதரன்), பக்தி இலக்கியம் (ஸ்ரீகலா ஜெகநாதன்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இறுதிப் பாகத்தில் தோத்திரப் பாடல்கள் சில இடம்பெறுகின்றன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 063442).