14169 யாழ்.இந்துக்கல்லூரி சிவஞான வைரவர் கோவில் குடமுழுக்கு விழா மலர்.

கை.க.விசாகரத்தினம், இ.சங்கர் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பழைய மாணவர் சங்கம், யாழ். இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: செட்டியார் பதிப்பகம், 411/1, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை). (52) பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 5.00, அளவு: 24.5×18.5 சமீ. 10.04.1989 அன்று குடமுழுக்கையும், 25.05.1989இல் மண்டல முழுக்கையும் கொண்டாடியதன் நினைவாக வெளிவந்துள்ள சிவஞான வைரவர் கோவில் குடமுழுக்கு விழாச் சிறப்பிதழில், படையல் (யாழ். இந்துக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்), அருளாசி (ஸ்ரீலஸ்ரீ ஸ்வாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் குருமகா சந்நிதானம் நல்லை ஞானசம்பந்தர் ஆதீனம்), ஆசியுரை (கி.சுப்பிரமணிய சாஸ்திரிகள்), கல்லூரியின் காவல் தெய்வம் (ச.பொன்னம்பலம்), சுபீட்ச நல்வாழ்வு மல்க (டபிள்யு.எஸ்.செந்தில்நாதன்), கஞ்சுகற்கு மகாபிடேகம் கல்லூரிக்கு இராஜயோகம் (நம.சிவப்பிரகாசம்), ஆலய வரலாறு – ஒரு நோக்கு (சி.சிவகுருநாதன்), கும்பாபிஷேக மகத்துவம் (ப.கோபாலகிருஷ்ணன்), சில நினைவுகள் (சிவனருட்செல்வன் சி.செ.சோமசுந்தரம்), யாழ்ப்பாணத்தில் வைரவ வழிபாடு (சிவ.மகாலிங்கம்), சிவஞான வைரவர் (சோ.பத்மநாதன்), நெஞ்சில் நிறைந்தவை (கை.க.விசாகரத்தினம்), நன்றி (சு.டிவகலாலா) ஆகிய படைப்பாக்கங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34635).

ஏனைய பதிவுகள்