14171 வட்டுக்கோட்டை – தெக்கணப்பாய் கண்ணகாம்பிகா சமேத கண்ணலிங்கேஷ்வரர் ஆலய கும்பாபிஷேக மலர். மலர்க் குழு.

வட்டுக்கோட்டை: கண்ணகாம்பிகா சமேத கண்ணலிங்கேஸ்வரர் ஆலயம், மூளாய் வீதி, தெக்கணப்பாய், வட்டுக்கோட்டை மேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (100) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19.5 சமீ. 08.08.1998 அன்று வெளியிடப்பெற்ற இச்சிறப்பு மலரில் ஆசியுரைகள், வாழ்த்துரை களுடன், எல்லாம் இறைவன் செயலே (இ.பொன்னுராசா), வட்டுக்கோட்டை மேற்கு – மூளாய் வீதி தெக்கிணப்பாய் கண்ணகாம்பிகை சமேத கண்ணலிங்கேஸ்வரர் சரணம் (முருகேசு சவுந்தர சண்முகநாதன்), நம் கடன் பணி செய்து கிடப்பதே (சைவ மகளிர்), கண்ணகாம்பிகா சமேத கண்ணலிங்கேஸ்வரர் ஆலய வரலாறு, கும்பாபிஷேகம், கும்பாபிஷேக முறைகளும் விளக்கமும், கண்ணகாம்பிகா சமேத கண்ணலிங்கேஸ்வர ஆலய தொண்டர் சபையின் எழுச்சியும் வளர்ச்சியும், பெருஞ்சாந்திக்குச் சாந்தியாயமையும் மண்டலாபிஷேகம் அதற்கு அங்கமான சங்காபிஷேக மகத்துவம், சங்காபிஷேக மகத்துவம், சங்காபிஷேகம், அபிஷேக திரவியங்களும் அதன் பலாபலன்களும், விநாயகர் அகவல், 21 பெயர் கொண்ட சூரிய சுலோகம், விஷ்ணு சகஸ்ர நாமம், விநாயகர் கவசம், சிவபுராணம், திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை, திருப்பொற்சுண்ணம், அபிராமியம்மை பதிகம், ஸ்ரீ துர்க்கா தேவி அஷ்டகம், இலக்குமி தோத்திரம், சகலகலா வல்லி மாலை, அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், கந்தர் சஷ்டி கவசம், பஞ்ச புராணம், கொடிக்கவி: சந்தானகுரவர் உமாபதி சிவாச்சாரியார் அருளியது, நவசந்திப் பண்கள், பிரம்மசந்தி – கோபுர வாசல் நீலாம்பரி, இந்திர சந்தி – கிழக்கு, இமய சந்தி – தெற்கு, நிருதி சந்தி – தென்மேற்கு, குபேரசந்தி – வடக்கு, வாயுசந்தி – வடமேற்கு, நவக்கிரக வழிபாடு, ஈசான சந்தி – வடகிழக்கு, ஆராத்தி, உன் கருணை வழியவேண்டும், தேவி தோத்திரம், லலிதா நவரத்னமாலை, ஸ்ரீ கிருஷ்ண நாமாவளி, கண்ணலிங்கேஸ்வர ஸ்வாமி திருவூஞ்சல், கண்ணகாம்பிகை திருவூஞ்சல், கண்ணலிங்கேசர் எச்சரிக்கை, கண்ணகாம்பிகை எச்சரிக்கை ஆகிய சைவசமயத்தினருக்குப் பயனுள்ள பல விடயங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 17620).

ஏனைய பதிவுகள்

12634 – சித்த மருத்துவம் 1988/1989.

S.யோகேந்திரன், டீ.சைலஜா (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). xvi, 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18

14415 தமிழ் தலைப்புச் சொற்களுடன் முழுமையான பிரயோக மும்மொழி அகராதி.

எழுத்தாளர் குழு. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 8: அரசாங்க

14833 ஈழத்தில் தமிழ்நாவல் இலக்கியம்: சில குறிப்புகள்.

ஆ.சிவநேசச்செல்வன். யாழ்ப்பாணம்: கலைப்பெருமன்ற வெளியீடு, ஏப்ரல் 1973. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. கலைக்கண் இதழில் 23.4.1973 அன்று வெளிவந்த கட்டுரையின் தனி நூல்வடிவம். நூலாசிரியர்,