13002 சி++ மொழி (முதல் பதிப்பு)

ந.செல்வகுமார். யாழ்ப்பாணம்: கணினிக் கல்வி நிலையம், 100, மணிக்கூட்டு வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).
x, 218 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 955-97996-0-6.

கணினி நிகழ்ச்சி வடிவமைப்பு மொழிகள் பற்றிய நூல். அறிமுகம் என்ற முதலாவது பிரிவில் கணினி உயர்நிலை மொழிகளின் அவசியம், கணினி உயர்நிலை மொழிகளின் அறிமுகம், சி++கொம்பைலர்கள், சிூூ மொழிப் புறோகிராம் அமைப்பு, சி++ மொழிப் புறோகிராம் அடிப்படைகள் ஆகியன விளக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வரும் இயல்களில் மாறிகளும் மாறிலிகளும் (Variables & Constants), ஒப்பரேற்றர்கள் (Operators), கட்டுப்பாட்டுக் கட்டளைகள் (Control Statements), பங்ஷன்கள் (குரnஉவழைளெ), அறேக்கள்- ஸ்ட்ரக்ஷர்கள் மற்றும் பொயின்ரர்கள் (Arrays, Structures & Pointers), ஒப்ஜெக்ட் ஓரியன்டட் புறோகிராமிங்கின் (Object Oriented Programmes – OOP) விளக்கங்களும் பிரயோகங்களும், டெம்பிளேற்றுகள் (Templates), பைல்கள் (Files), பிழைகளும் பிழையேந்திகளும் (Errors and Exception Handling), நாமே உருவாக்கிக்கொள்ளும் ஹெடர் பைல்கள் (User Defined Header File) ஆகிய பாடங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் உதாரணப் புரோகிராம்களும் வெளியீடுகளும், ‘அஸ்க்கீ ” அட்டவணை (ASCII Table), விஷவல் சி++ எடிட்டரில் சி++ மொழிப் புரோகிராம்களைச் செயற்படுத்தல், சுட்டி (Index)) என்பன தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12450).

ஏனைய பதிவுகள்

12753 – இலக்கிய விழா 1990-1991: சிறப்பு மலர்.

எஸ்.எதிர்மன்னசிங்கம் (மலர்க் குழுவினர்சார்பில்). திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்). (12), 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,